விக்கி டோனர் ரீமேக்

"விக்கி டோனர்' படம் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது "தாராள பிரபு'. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றிப் பெற்ற படம் ஹிந்திப் படம் "விக்கி டோனர்'.
விக்கி டோனர் ரீமேக்

"விக்கி டோனர்' படம் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது "தாராள பிரபு'. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றிப் பெற்ற படம் ஹிந்திப் படம் "விக்கி டோனர்'. ஷூஜித் சர்கார் இயக்கிய இந்தப் படம்தான், ஆயுஷ்மான் குரானா நடித்த முதல் படம். நடிகர் ஜான் ஆப்ரஹாம் தயாரித்த இந்தப் படம், 2012-ஆம் ஆண்டு வெளியானது. கௌதம் நடிக்க, அன்னு கபூர், கம்லேஷ்கில், பூஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
 குழந்தைப் பேறின்மையை மையமாக வைத்து கதைக்கரு உருவாக்கப்பட்டது. பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தது மட்டுமன்றி, 3 தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளையும் பெற்றது. "ஸ்டார்பக்' என்ற கனடா படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது தமிழில் ஹரிஷ் கல்யாண். தான்யா ஹோப், விவேக் நடிக்கின்றனர். கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com