காபியில்  கலைநயம்!

தஞ்சாவூர் பெயிண்டிங் , ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலரிங் என ஓவியம் வரைவதில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. அதில் ஓவியக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து வருவார்கள்.
காபியில்  கலைநயம்!


தஞ்சாவூர் பெயிண்டிங் , ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலரிங் என ஓவியம் வரைவதில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. அதில் ஓவியக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு பாணியை கடைப்பிடித்து வருவார்கள். அந்த வகையில், காபித் தூள் கொண்டு வரையும் ஓவியத்தில் சிறந்து விளங்குகிறார் பெங்களூருவைச் சேர்ந்த மாதுரி உமா சங்கர். இது குறித்து அவர் கூறுகையில், ""ஓவியத்துக்கு கற்பனை அவசியம். அதிலும் வித்தியாசமான ரசனை இருந்தால் வெற்றி நிச்சயம். அந்த வகையில், பள்ளி காலத்திலிருந்தே எனக்கு ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. என்னுடைய இந்த அதீத ஆர்வத்தினால் இணையத்தின் உதவியோடு நானே ஓவியம் வரைய கற்றுக் கொண்டேன்.

மேற்படிப்புக்காக ஆறு ஆண்டுகள் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்தபோது, வேலை பார்த்துக் கொண்டே ஓவியத்திலும் கவனம் செலுத்தி வந்தேன். அப்போதுதான் புதிய யுக்திகளுடனும் ஓவியத்தை உருவாக்கலாம் என அறிந்து கொண்டேன். அப்படி உருவானதுதான் காபியால் ஆன ஓவியங்கள்.

இதற்கு அடிப்படை தேவை லைட் காபி மற்றும் ஸ்டிராங் காபி, கூடுதலுக்காக டிகாஷன் ( 90%); சுடுநீர் (6%) கலந்த கலவை. முதலில், பேப்பர் அல்லது துணியில் வரைய வேண்டிய படத்தின் அவுட் லைன் வரைந்து கொள்ள வேண்டும். பின்னர், காபி பொடியைத் தண்ணீரில் கலந்து டார்க், மீடியம், லைட் என ஷேடுகளை ஏற்படுத்த வேண்டும். பின்னர், ஓவியத்துக்கு ஏற்ப லைட், டார்க் ஷேடு தீட்ட வேண்டும். கூடுதலாக சில வண்ணங்கள் அவசியமானால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் ஓவியத்தின் மீது வார்னிஷ் ஸ்பிரே அடித்துவிட்டால் நீண்ட நாட்கள் தூசு படியாது'' என்று கூறும் மாதுரி , இந்த பொதுமுடக்கக் காலத்தில், ஆன் லைன் மூலம் பலருக்கும் காபி பெயிண்டிங் பற்றிய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com