மழைப் பாடல்கள்

1949-இல் ராஜ்கபூருடைய "பர்ஸாத்' (மழை) பிறகு 1960-இல் மதுபாலா நடித்த "பர்ஸாத் கீ ராத்' (மழை பெய்த ராத்திரி) போன்ற பிரபலமான மழைப் படங்களைத் தொடர்ந்து இந்தியில் பல மழைப் படங்கள் வந்திருக்கின்றன.
மழைப் பாடல்கள்


1949-இல் ராஜ்கபூருடைய "பர்ஸாத்' (மழை) பிறகு 1960-இல் மதுபாலா நடித்த "பர்ஸாத் கீ ராத்' (மழை பெய்த ராத்திரி) போன்ற பிரபலமான மழைப் படங்களைத் தொடர்ந்து இந்தியில் பல மழைப்படங்கள் வந்திருக்கின்றன.

தமிழில் 1989-இல் சில்க் ஸ்மிதா நடித்து வெளிவந்த "அன்று பெய்த மழையில்' என்னும் படத்தையல்லாமல் மழையை டைட்டிலில் கொண்ட படங்கள் ஏதும் வந்ததாய் தெரியவில்லை. ஆனால் மழைப் பாடல்கள் ஏராளமாய்த் தமிழ்ப் படங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

கவிஞர் கண்ணதாசன் "மழை பொழிந்து கொண்டே இருக்கும், உடல் நனைத்து கொண்டே இருக்கும்' என்று "குடும்ப தலைவன்'  படத்திலும் "இடி இடிச்சி மழை பொழிஞ்சி எல்லாம் நின்னாச்சு' என்றும் எழுதினார்.

"சபாஷ் மீனா' படத்தில் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் "வானம் சிந்தும் மழையெல்லாம் வானோர் தூவும் தேன் மலரோ' என்று மழைக்கு ஒரு புது பரிமாணம் கொடுத்தார்.

ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்ற எல்லா மழைப் பாடல்களிலும் அட்டகாசமான பாடல் "ஆட வந்த தெய்வம்' படத்தில் கவிஞர். அ. மருதகாசி எழுதி டி.ஆர். மகாலிங்கம் பாடிய "மழை கொட்டு கொட்டுனு கொட்டுதுபாரு அங்கே' என்ற பாடல். 

(ஏ.ஏ. ஹெச். கே. கோரி எழுதிய காணாமல் போகவிருந்த கதைகள் என்னும் நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com