போராடுவதைப் பார்க்க விரும்பவில்லை

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹாலிவுட் நடிகர்கள் பட்டியலில் ஜாக்கிசான் இரண்டாவது இடம்பெற்றுள்ளார். 
போராடுவதைப் பார்க்க விரும்பவில்லை

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹாலிவுட் நடிகர்கள் பட்டியலில் ஜாக்கிசான் இரண்டாவது இடம்பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் "அயர்ன் மேன்' படத்தில் கதாநாயகனாக நடித்த ராபர்ட் டவ்னி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார்.
சமூக அக்கறையுள்ள நடிகர் ஜாக்கிசான் கரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு மக்களிடம் பேசி வருகிறார். "கரோனாவைக் குணப்படுத்தும் தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். உலக அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட வேண்டுகிறேன். மக்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும். 
உலக முழுவதும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்பு அதிகமாகி கொண்டே வருவது வருத்தமளிக்கிறது. கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பவருக்கு, ஒரு மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய்) பரிசு அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். பணத்தை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. நான், என் நண்பர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுப் போராடுவதைப் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் இந்த கொடூரமான வைரûஸ தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அவசியம். 
ஏற்கெனவே சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஆண்டனி, மருந்து கண்டுபிடித்தே தீரவேண்டும் என்ற உறுதியுடன் ஆய்வில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாக்கிசானுக்கு கரோனா தொற்று இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இதனை மறுத்த ஜாக்கிசான் தான் நலமாக இருப்பதாக விழிப்புணர்வு வீடியோவில் தெரிவித்துள்ளார். 
ஸ்டான்லி டோங் இயக்கிய ஜாக்கி சானின் புதிய திரைப்படம் "வான்கார்ட்' கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தனர், ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படம் வெளியாவது தள்ளிப்போனதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். மக்கள் கரோனா வென்ற சந்தோஷத்தில் என்னுடைய படத்தை விரைவில் பார்ப்பார்கள்'' என்றார் ஜாக்கிசான்.
மேலும் சுதந்திர போராட்ட வீரர் ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் வாழ்க்கையை மலையாள படமாக எடுக்க சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு திட்டமிடப்பட்டது. 
"நாயர் ஷான்' என்று பெயரிடப்பட்ட படத்தில் நடிகர் மோகன்லால் - ஜாக்கிசான் இணைந்து நடிக்கிறார்கள். மோகன்லால் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் "நாயர் ஷான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜாக்கிசான் இணைந்திருப்பதால் உலக அளவில் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. விரைவில் ஜாக்கிசானை கேரளாவில் காணலாம்.
-வனராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com