யானைக்கும் பசி

நம் நாட்டில் புலம் பெயர்ந்து வேலைக்கு வந்தவர்கள், ஊரடங்கு பிரச்னையால் வேலை செய்ய இயலாமல், சாப்பாட்டிற்கு வழியில்லை என்ற நிலை வந்ததும், நாங்கள் எங்கள் ஊருக்குச் செல்கிறோம் என 
யானைக்கும் பசி

நம் நாட்டில் புலம் பெயர்ந்து வேலைக்கு வந்தவர்கள், ஊரடங்கு பிரச்னையால் வேலை செய்ய இயலாமல், சாப்பாட்டிற்கு வழியில்லை என்ற நிலை வந்ததும், நாங்கள் எங்கள் ஊருக்குச் செல்கிறோம் என கால்நடையாக ரயில்கள் மூலம் செல்வதும் நமக்கு தெரிந்த விஷயம்.
 யானைக்கும் இதே போன்று ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
 எங்கே தெரியுமா?
 தாய்லாந்தில்!
 அங்கு யானைகள் அதிகம். அங்கு யானைகள், வியாபார நோக்கில் நடத்தப்படும் யானை முகாம்கள் சரணாலயங்கள் என பலவற்றில் கூட்டம் கூட்டமாக வசிக்கும். அவற்றைப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிவதுடன் யானைக்கு சாப்பிட பழங்கள் மற்ற உணவுப் பொருட்களையும் தாராளமாய் தருவர்.
 கரோனா வந்ததிலிருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அறவே நின்றுவிட்டது. அதனால் யானை முகாம்களிலும் சரணாலயங்களிலும் செலவுக்கே சிக்கல். சாதாரணமாகவே யானைக்கு செலவு அதிகம். இந்த நிலையில் உணவுக்கும் வழியில்லை. தாய்லாந்து வட பகுதியில் யானைகள் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. சாப்பாடு போட வழியில்லையென்றால் அவற்றை காட்டுக்காவது அனுப்புங்கள். அங்கேயாவது நிம்மதியாய் வாழட்டும்- என கோரிக்கை வைத்தது.
 இது ஏற்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட யானைகள் காட்டை நோக்கி அனுப்பப்பட்டன.
 யானைகள் முகாமிலிருந்து காட்டிற்கு 150 கி.மீதூரம் நடந்தே சென்றன.
 -ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com