அறக்கட்டளை மூலம் உதவி...

கரோனா நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
அறக்கட்டளை மூலம் உதவி...

கரோனா நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பலரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்துள்ளது.

பணத்தை ஈட்ட வழியில்லாமலும், வேலையை இழந்தும் இருக்கின்ற பல பேருக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தனது அறக்கட்டளை மூலம் தீர்வு கண்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்த அறக்கட்டளை இது வரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக அளித்ததுடன்,   1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்குச்  சரியான நேரத்தில் முக்கிய உதவிகள் சென்றடைய செய்துள்ளார். 

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில்,  இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.   இதே போல் பல நலத்திட்ட உதவிகளை மேலும் அறிவிக்க உள்ளதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com