விவசாயம்: குழந்தைகளுக்கும் பயிற்சி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மின் பொறியாளரான இளைஞர் ஒருவர், விரும்பி விவசாயம் செய்து வருகிறார்.
விவசாயம்: குழந்தைகளுக்கும் பயிற்சி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மின் பொறியாளரான இளைஞர் ஒருவர், விரும்பி விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆர்வத்தைத் துôண்டி பயிற்சி அளித்தும் வருகிறார்.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பது, விவசாயிகளின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் பழமொழிகளின் ஒன்றாகும். விவசாயம் செய்பவர்களை ஏளமான பேசிய நிலை மாறி, வணங்கி போற்றி புகழ்ந்து பேசும் அளவிற்கு சமூகம் மாறியதற்கு, மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் படிப்புகளை படித்தவர்களும், அதீத நாட்டத்தோடு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதே முக்கிய காரணம் எனலாம்.

இந்த வரிசையில், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை பெயரனும், விவசாயி சாந்தப்பன் - விஜயலட்சுமி தம்பதியின் மகனுமான 35 வயது இளைஞர் பாலசந்தர் இடம் பிடித்துள்ளார்.

மின் மற்றும் மின்னணு துறையில் பொறியியல் பட்டயம் பெற்றுள்ள இவர், கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக சேலம் காரிப்பட்டி அருகிலுள்ள சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தில் மின் கருவிகள் பராமரிப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். உலகிற்கு உணவளிக்கும் விவசாயத்தின் மீது பாலசந்தருக்கு விருப்பம் அதிகம்.

இதனால், இன்றளவும் ஷிப்ட் முறையில் பணிக்கு சென்று திரும்பும் பாலசந்தர், மற்றஅனைத்து நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும்,தனக்கு சொந்தமான பூர்வீகமான 2 ஏக்கர் விளைநிலத்தில் குறைந்தளவு கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி பாரம்பரிய முறையில், தனது தாயார் விஜயலட்சுமி, மனைவி பிரியதர்சினி ஆகியோரது ஒத்துழைப்புடன் மிகவும் நேர்த்தியாக விவசாயம் செய்து வருகிறார். பாக்கு, தென்னை, வாழை ஆகிய நீண்ட கால பலன் தரும் மரவகை பயிர்களோடு, பருவத்திற்கு ஏற்றார் போல் அனைத்து வகையான காய்கறிகள், நெல் உள்ளிட்ட உணவு தானியங்களையும் பயிரிட்டு அறுவடை செய்து அசத்தி வருகிறார்.

உணவு உற்பத்தி செய்யும் புனிதமான விவசாயம் குறித்து, தனது குழந்தைகள் அருண் பிரசாத், கோப்பெருஞ்சோழன் ஆகியோருக்கு மட்டுமின்றி, தனது உறவினர்களின் குழந்தைகளுக்கும் விழிப் புணர்வு ஏற்படுத்தி ஆர்வத்தைத் துôண்டி பயிற்சி அளித்து வருகிறார்.

இதுகுறித்து பாலசந்தர் நம்மிடம் கூறியது:

""எனது தந்தை ஒரு விவசாயி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்வரை விவசாயிகள் என்றாலே ஏளனமாக பார்த்தவர்கள் ஏராளம். குறிப்பாக படித்தவர்கள் விவசாயிகளுக்கு உரிய மதிப்பளிக்காமல் உதாசினப்படுத்தியதால், விவசாயம் நமது தந்தையோடு போகட்டுமென பல நாட்கள் எண்ணியதுண்டு.

இதனால்தான் மின் பொறியியல் துறையில் பட்டயம் பெற்ற நான் தனியார் சாக்லேட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். எந்த உணவுப்பொருளை தயாரிக்க வேண்டுமெனிலும் இதற்கு விவசாயமும், விவசாயியும் தான் முழு முதற்காரணம் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டதால், எனக்குள் விவசாயத்தின் மீதும் விவசாயிகளின் மீதான மதிப்பும் உயர்ந்தது.

தற்கால குழந்தைகளுக்கும் விவசாயத்தின் மீது பற்றுதல் ஏற்பட வேண்டும் என்பதற்காக, எனது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, எனது உறவினர்களின் குழந்தைகளுக்கும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆர்வத்தைத் துôண்டி பயிற்சியும் அளித்து வருகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com