எம்.எஸ்.வி குடும்ப இசை வாரிசு

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் வாரிசு இசைக் குரல் மாதங்கி அஜித்குமார்.
எம்.எஸ்.வி குடும்ப இசை வாரிசு

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் வாரிசு இசைக் குரல் மாதங்கி அஜித்குமார். மூன்று வயதில் இருந்தே எம் .எஸ். விஸ்வநாதனின் கச்சேரிகளில் வலம் வந்தவர். வளர்ந்து இப்போது ஜேசுதாஸ் உடன் இணைந்து ஒரு பாடல் பாடுமளவுக்கு வளர்ந்திருக்கிறார்.பொதிகைத் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பாடி இருக்கிறார். இப்படி சுமார் 50 பாடல்கள் பாடியிருக்கிறார் . பி.சுசீலா முதல் பிரபல பாடகர்கள், பாடகிகள் பலருடன் இணைந்து பாடியிருக்கிறார் .

அதே பொதிகையில் எம்.எஸ்.வி.யின் மறைவுக்குப்பின் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியான எம்.எஸ்.விக்கு சமர்ப்பணம் செய்யும் "எம்எஸ்வி எம்எஸ்வி' என்ற நிகழ்ச்சியிலும் இவர் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். இப்போது மலையாளத்தில் உருவாகிவரும் படத்தில் ஒருபாடலை பாடியிருக்கிறார்.அடுத்து மம்முட்டி நடிக்கும் "சர்க்கிள்' படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார். விஜய் ஜேசுதாஸ் தொடங்கி உன்னி மேனன், சுதீப்குமார், நஜீம் அர்ஷத், நிகில் மேத்யூ, பிரதீப் பல்லுருத்தி, நிஷாத், பிரதீப் சோமசுந்தரம் எனத் தொடர்ந்து கே.ஜே.ஜேசுதாஸ் வரை பலருடன் இணைந்து மேடைகளில் பாடிவருகிறார்.

அடுத்து தமிழில் உருவாகும் படங்களில் பாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com