புது வித  திரைப்பட விழா

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமாத்துறையும் முதன்மையானது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமாத்துறையும் முதன்மையானது. படப்பிடிப்பு ரத்து, திரையரங்குகள் மூடல் என முடங்கிப்போய் கிடக்கிறது. உலக அளவில் பெயர் பெற்ற, திரைப்பட விழாக்களும்  இந்த ஆண்டு நடைபெறுமா எனத் தெரியவில்லை. ஆஸ்கர் கமிட்டி, அதன் முக்கியமான விதியையே தளர்த்தியிருக்கிறது. இந்தப் பெரும் வேதனைக்கு, சிறு ஆறுதலாக வந்திருக்கிறது ஓர் அறிவிப்பு.

அமெரிக்காவைச் சார்ந்த ட்ரிபெக்கா எனும் ஊடக நிறுவனம், யூடியூப் நிறுவனத்துடன் இணைந்து  உலகளாவிய திரைப்பட விழா ஒன்றை இணையத்தில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. 

பெர்லின், சிட்னி, டோக்கியோ, டொரோண்டோ, ட்ரிபெக்கா, சுன்டன்ஸ், வெனிஸ், நியூயார்க், கேன்ஸ், மும்பை ஆகிய நகரங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகின் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களுடன் இணைந்து நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

யூடியூப் தளத்தில் இலவசமாகத் திரையிடப்படும் உலக சினிமாக்களைக் கண்டுகளிக்கும் அதேவேளையில் பார்வையாளர்கள் உலக சுகாதார நிறுவனத்துக்கு நிவாரணமும் அளிக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com