Enable Javscript for better performance
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

    By DIN  |   Published on : 01st March 2020 12:26 PM  |   அ+அ அ-   |    |  

    kumaran

    வார்வின் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்'. சீனுராமசாமியின் உதவியாளர் தயானந்தன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
     மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் மதுவுக்கு அடிமையான ஒருவர், தன்னை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, முன்னெடுக்கும் புரட்சிகரமான நடவடிக்கைகளைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுவதே கதை.
     தனிமனித வாழ்வின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாகக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
     பிரஜின், ரியாமிகா, கே. பாக்யராஜ், இமான் அண்ணாச்சி நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. "சாதக பறவைகள்' சங்கர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai