தாய்மொழி முக்கியம் 

"கேடி' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதைத் தொடர்ந்து "வியாபாரி' படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பாலாஜி சக்திவேலின் "கல்லூரி' படத்தில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார்.
தாய்மொழி முக்கியம் 

"கேடி' படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதைத் தொடர்ந்து "வியாபாரி' படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பாலாஜி சக்திவேலின் "கல்லூரி' படத்தில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார். தனுஷின் "படிக்காதவன்', சூர்யாவின் "அயன்', கார்த்தியின் "பையா', விஜயின் "சுறா', அஜித்தின் "வீரம்' உட்படப் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். 

இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக "ஹிம்மத்வாலா' என்ற படத்தில் நடித்தார்.தமிழில் வெப்சீரிசில் நடித்து முடித்துள்ள தமன்னா, இந்தியில் "சுடியன்', தெலுங்கில் "சீட்டிமார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மும்பையில் பிறந்து வளர்ந்த தமன்னா, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டார். தெலுங்கில் அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே டப்பிங் பேசுகிறார். 

நடிகை தமன்னாவின் தாய் மொழி சிந்தி. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் பேசும் நடிகை தமன்னாவுக்கு தனது தாய்மொழியில் பேசத் தெரியாது. சில வார்த்தைகள் புரியும் என்றாலும் சரளமாகப் பேச வராது என்பதால், இந்த ஊரடங்கில் தனது அம்மாவிடம் சிந்தி மொழியை கற்கிறார். மற்ற மொழிகள் தெரிந்திருந்தாலும் தாய்மொழி தெரிந்திருப்பது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com