ஆரோக்கியமே பிரசாதம்! - ஆச்சரிய அர்ச்சகர் 

""வாழ்க்கையில் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி என்பது அவசியமாகும்'' என்கிறார் சேஷாத்ரி.
ஆரோக்கியமே பிரசாதம்! - ஆச்சரிய அர்ச்சகர் 


""வாழ்க்கையில் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி என்பது அவசியமாகும்'' என்கிறார் சேஷாத்ரி.  64 வயதாகும் இவர் சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். இவர் கராத்தே மாஸ்டரும் கூட. இந்தப் பகுதியிலுள்ள குழந்தைகள், கல்லூரி மாணவிகளுக்குத் தற்காப்புக் கலையான கராத்தே பயிற்சி அளித்து வருகிறார்.

உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து நம்மிடம் பேசினார்:

""உடற்பயிற்சி என்பது உடலுக்கு  ஆரோக்கியம் தருவது. எத்தனை வயதானாலும் நாம் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தியதால்தான் இந்த கரோனா காலத்தில் எந்த பயமும் இல்லாமல் கழிக்க முடிந்தது. குறிப்பாக மூச்சுப் பயிற்சி மறக்காமல் செய்வேன். அதனால் தான் எந்த சளி தொல்லையும் கிடையாது. வேறு எந்த வியாதிகளும் எனக்குக் கிடையாது.  ஆனால், எந்தக் கலையாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மனது ஒத்துழைக்கும் அளவுக்கு உடல் ஒத்துழைக்காது. ஆனால், கராத்தேவின் நிலை வேறு. எந்த அளவுக்கு உங்களுக்கு வயதாகிறதோ அந்த அளவுக்கு உங்கள் உடலும் மனதும் இளமையாக இருக்கும். 

எங்கள் பகுதியிலுள்ள குழந்தைகள், கல்லூரி மாணவிகளுக்கு நான் கற்ற தற்காப்புப் பயிற்சியை அளித்து வருகிறேன். சிலர் வீட்டிற்கு வந்து சொல்லித் தர முடியுமா என்று கேட்பார்கள். அவர்களின் வீடுகளுக்கும் சென்று பயிற்சியளித்து 
வருகிறேன்.

அதிகாலை 4 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி செய்வேன். தொடர்ச்சியாக உடற்பயிற்சி, யோகா செய்துவிட்டுத்தான் கராத்தே பயிற்சியைத் தொடங்குவேன். காலை, மாலை என அன்றாடம் பயிற்சி செய்துவிடுவேன். இன்று அனைவருக்குமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை வந்துவிட்டது. எல்லாருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் முக்கியத் தேவையாக உள்ளது. அதனை இதுபோன்ற கராத்தே பயிற்சிகள் நிறைவு செய்கின்றன!''  என்கிறார் அர்ச்சகர் சேஷாத்ரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com