கிராண்ட்ஸ்லாமின் புதிய சாம்பியன்டொமினிக் தீம்

மும்மூர்த்திகளான பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரின் ஆதிக்கத்தை மீறி டென்னிஸின் கெளரவமிக்க கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யு.எஸ் ஓபன் போட்டியில் புதிய சாம்பியனாக உருவாகியுள்ளார் ஆஸ்திரிய இளம் வீரர்
கிராண்ட்ஸ்லாமின் புதிய சாம்பியன்டொமினிக் தீம்

மும்மூர்த்திகளான பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரின் ஆதிக்கத்தை மீறி டென்னிஸின் கெளரவமிக்க கிராண்ட்ஸ்லாம் பந்தயமான யு.எஸ் ஓபன் போட்டியில் புதிய சாம்பியனாக உருவாகியுள்ளார் ஆஸ்திரிய இளம் வீரர் டொமினிக் தீம்.

கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, வாலிபால், போன் விளையாட்டுகள் வரிசையில் டென்னிஸ் அதிக வரவேற்பை பெற்றதாகும். அதிக பொருள் செலவு தேவைப்படும் இந்த விளையாட்டில் கடந்த 17 ஆண்டுகளாக மும்மூர்த்திகள் எனப்படும் ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிச் உள்ளிட்டோரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

ஆஸி, பிரெஞ்ச், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் உள்ளிட்ட 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை மாறி மாறி இவர்கள் மூவரே வென்று வந்தனர். ஏ.டி.பி தரவரிசையில் மூவரே 8 முறைக்கு மேல் உலகின் முதலிடத்தை வகித்தனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றில் பெடரர் 31 முறையும், நடால் 27 முறையும், ஜோகோவிச் 26 முறையும் தகுதி பெற்றனர். 

56 சாம்பியன் பட்டங்கள்: 67 போட்டிகளில் மூவரும் இணைந்து 56 சாம்பியன் பட்டங்களை வென்றதே அவர்களது ஆதிக்கத்தைக் காட்டுகிறது. இவர்களுக்குச் சவாலை தரும் வகையில் டொமினிக் தீம், ஸ்டெபனோஸ் ஸ்ட்சிபாஸ், அலெக்சாண்டர் வெரேவ் கடந்த 2 ஆண்டுகளாக ஆடி வந்தனர். எனினும் கடந்த 2019-இல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மும்மூர்த்திகளே பட்டம் வென்றனர். இளம் தலைமுறை வீரர்கள் இறுதி வரை மட்டுமே நுழைந்தனர். 2020 ஆஸி. ஓபன் போட்டியிலும் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

புதிய சாம்பியன்: இந்நிலையில் யுஎஸ் ஓபன் போட்டியில் புதிய சாம்பியனாக உருவெடுத்துள்ளார் டொமினிக் தீம். ஐரோப்பிய கண்டத்தின் மையத்தில் உள்ள ஆஸ்திரிய நாட்டில் டென்னிஸ் குடும்பத்தில் கடந்த 1993-இல் பிறந்தார் தீம். அவரது பெற்றோர் வொல்ப் காங்-கரீன் தீம் ஆகியோர் பயிற்சியாளர்கள் ஆவர். 

6 வயதில் ஆடத் தொடங்கிய தீம் ஜூனியர் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை வீரராக திகழந்தார். 2014-இல் முதல் ஏடிபி போட்டியின் இறுதிக்குள் நுழைந்தார். 2015-இல் 3 ஏடிபி பட்டங்களை கைப்பற்றியது தீம் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. 

முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதி: 2018-இல் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றில் நுழைந்த தீம், உலகின் முதல் 10 வீரர்களில் ஒருவராக உயர்ந்தார். 2017-இல் மாஸ்டர்ஸ் போட்டி இறுதிச்சுற்றில் நுழைந்து 4 ஆம் நிலை வீரராக உயர்ந்தார்.  தொடர்ந்து 2019-இல் மாஸ்டர்ஸ் 1000 பட்டம், கிராண்ட்ஸ்லாம் இறுதிக்கு தகுதி, 5 பட்டங்கள், ஏடிபி பைனல்ஸ் 2-ஆம் இடம் என்ற சாதனைகளை நிகழ்த்தினார்.

முதல் சாம்பியன் பட்டம்: இதன் தொடர்ச்சியாக  2020 ஆஸி. ஓபன் போட்டியில் ஜோகோவிச்சிடம் போராடித் தோற்றுப் பட்டத்தை இழந்தார். எனினும் அண்மையில் நடைபெற்ற யு.எஸ் ஓபன் போட்டியில் அலெக்சாண்டர் வெரேவுக்கு எதிரான இறுதி சுற்றில் 2 செட்கள் இழந்த நிலையிலும், வீறு கொண்டு எழுந்து அடுத்த 3 செட்களை கைப்பற்றி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

டொமினிக் தீம், வெரேவ், சிட்ஸிபாஸ் போன்ற  இளம் தலைமுறை வீரர்கள் இனி ஆதிக்கம் செலுத்துவர் என எதிர்பார்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com