முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
தென்னிந்திய இசையில் ஆர்வம்
By DIN | Published On : 04th October 2020 07:22 PM | Last Updated : 04th October 2020 07:22 PM | அ+அ அ- |

லண்டனைச் சேர்ந்த இசைக் கலைஞர் பிஸ்வஜித் நந்தா. லண்டனில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் ஐ.டி துறையில் பணிபுரிந்து வருகிறார். இசை மீது தீராத ஆர்வம் கொண்ட இவரை, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அனிருத்தின் "டேவிட்' படத்தில் இடம்பெற்ற "கனவே கனவே....' என்கிற பாடல் மிகவும் ஈர்த்து விட்டது. இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் பிஸ்வஜித், இந்தப் பாடலின் இசைக் குறிப்புக்கு தனது பாணியில் புது வடிவம் கொடுத்திருக்கிறார். இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம் உடன் சேர்ந்து இந்தப் பாடலுக்குப் புது வடிவம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பிஸ்வஜித் கூறும்போது, “""எனக்கு தமிழ் தெரியாவிட்டாலும் நான் தமிழ் இசையை வெகுவாக ரசிப்பவன். தமிழகம் எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத் என மிகத் திறமையான இசைக்கலைஞர்களை கொண்டது. "கனவே கனவே...' பாடலுக்கு கவர் டிராக் உருவாக்கியதில் ரொம்பவே மகிழ்ச்சி. நிச்சயமாக அனைவரையும் இது கவரும். நிறைய தென்னிந்திய பாடல்களை உருவாக்குவதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஜிப்ரான், தேவிஸ்ரீபிரசாத், டி.இமான் ஆகியோருடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன்''” என்று தெரிவித்துள்ளார். மேலும் இசைக்காகவே தனியாக "சிங்கர் பிஸ்வஜித் நந்தா' என்கிற யூடியூப் சேனலை உருவாக்கியுள்ள இவர், இந்த “"கனவே கனவே...'”
பாடலின் கவர் ட்ராக்கை அதில் பதிவேற்றியுள்ளார்.