முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
புதுக் கதைகள்
By DIN | Published On : 04th October 2020 07:24 PM | Last Updated : 04th October 2020 07:24 PM | அ+அ அ- |

தனது தனித்துவ சினிமாக்களால் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் தங்கர்பச்சான். தற்போது கரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்தித் தனது அடுத்தடுத்த படங்களுக்கான திரைக்கதைகளை எழுதி வருகிறார். இது குறித்து அவர் பேசும் போது.... "" மறுமலர்ச்சி படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் வேலை செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்தன. அது முற்றிலும் தவறான தகவல். அது பற்றி எந்த பேச்சும் இல்லை. நான் கடந்த ஒரு மாதமாக வெளியூரில் அமைதியான சூழலில் இருக்கிறேன். அந்த சூழல் என்னை கதைகள்எழுத வைக்கின்றன. ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன். இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்தப் படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையைத் தற்போது எழுதி முடித்தேன். ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன். முழுமையான இரண்டு வாரங்களில் இடைஞ்சல் இல்லாத தூய்மையான காற்று, தூய்மையான நீர், இயற்கை உணவு இவைகளுடன் கூடிய சூழலில் இதை எழுதி முடித்திருக்கிறேன். கரோனா காலத்தில் எனக்கான பணிகளில் பல முன்னேற்றத் தடைகள் இருந்தாலும் இரண்டு சிறந்த திரைக்கதைகள் கிடைக்க உள்ளன எனும் மகிழ்ச்சி அனைத்தையும் மறக்கச் செய்கின்றன. புத்தம் புதிய கதைக் களத்துடன் உங்களை விரைவில் சந்திக்க இருக்கிறேன்'' என்று தெரிவித்தார் தங்கர்பச்சான்.