முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
ராஜாஜியின் அறிவுரை
By ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி | Published On : 04th October 2020 07:03 PM | Last Updated : 04th October 2020 07:03 PM | அ+அ அ- |

மத வேறுபாடு அறியாத கொடை வள்ளல் அப்துல் ஹக்கீம் சாகிபுவின் நிதி உதவியினால் ஆம்பூரில் இந்து உயர்நிலைப்பள்ளிக்கு கட்டடம் அமைக்கப்பட்டது.
அதன் திறப்பு விழாவுக்கு ராஜாஜி பெங்களூரிலிருந்து விரைவு வண்டியில் அவருக்காக இணைக்கப்பட்டிருந்த தனிப்பெட்டியில் ஆம்பூருக்கு வந்தார். திறப்பு விழா முடிந்தது. ராஜாஜி சென்னைக்குத் திரும்பினார்.
அப்போது சென்னையிலிருந்தும் வேலூரிலிருந்தும் வந்திருந்த தொண்டர்கள் ராஜாஜியின் தனிப்பெட்டி மூன்றாம் வகுப்பு பகுதியில் ஏறிக்கொண்டனர்.
இரவு 1 மணி. ரயில் நிலையத்தில் ராஜாஜி இறங்கினார். ராஜாஜி ஏன் இறங்கினார் என்பதை பார்ப்பதற்காக தொண்டர்களும் இறங்கினார்கள்.
அவர்களைப் பார்த்து"" நீங்கள் எல்லோரும் பயணச்சீட்டு வாங்கி இருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
அவர்கள்"" வாங்கவில்லை'' என்றார்கள்.
""பயணச்சீட்டு வாங்காமல் யாரும் வரக்கூடாது. இந்த வண்டி எனக்கும் என் உதவியாளருக்கும் மட்டும் தான். மற்றவர்களுக்கு அல்ல. என்னுடன் வருவதால் ரயில் அதிகாரிகள் உங்களிடம் பயணச்சீட்டு கேட்காமல் விட்டுவிடலாம். ஆனால் அப்படி நிர்வாகத்தை ஏமாற்றுவது தவறு. எல்லோரும் பயணச்சீட்டு வாங்குங்கள்'' என்றார்.
பழம்பெரும் தியாகி பெருமாள்சாமி ரெட்டியார் அந்த முப்பது பேருக்கும் பயணச்சீட்டு வாங்கித் தந்தார்.