ஹாலிவுட்டில் ஜி.வி.பிரகாஷ்

"டெவில்ஸ் நைட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, கைபா பிலிம்ஸ் டெல் கே. கணேசன் தயாரித்து வரும் படம் "ட்ராப் சிட்டி'.
ஹாலிவுட்டில் ஜி.வி.பிரகாஷ்


"டெவில்ஸ் நைட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, கைபா பிலிம்ஸ் டெல் கே. கணேசன் தயாரித்து வரும் படம் "ட்ராப் சிட்டி'. திருச்சியைச் சேர்ந்தவரான டெல் கே. கணேசன் அமெரிக்காவில் தொழில் செய்து அங்கேயே நிரந்தரமாகக் குடி பெயர்ந்தவர். இவர் தயாரித்து வரும் ஹாலிவுட் படத்தில் நெப்போலியன், ஜி.வி. பிரகாஷ், பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி ஜாக்ஸன் ஆகியோர் நடிக்கின்றனர்."

ட்ராப் சிட்டி' படத்தை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி. ஜாக்ஸன் தனது படத்தை இந்தியாவில் வெளியிடுவதிலும் பெரும் ஆவலாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. நெப்போலியன், "டெவில்ஸ் நைட்' படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பரவலாகப் பேசப்பட்டது. "டிராப் சிட்டி' ஹாலிவுட்டில் அவருக்கு இரண்டாவது படம். இதைத் தொடர்ந்து "கிறிஸ்துமஸ் கூப்பன்' என்ற இன்னொரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். ரிக்கி பர்செல் ஜாக்ஸன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் ரிக்கி பர்செல் கூறும்போது... "பழைய கதை சொல்லல் முறை மற்றும் ஹிப் ஹாப் இசையின் இயக்கவியல் ஆகியவற்றின் கலவையான டிராப் சிட்டி, திருட்டு, ராப் இசை, போலீஸ் வன்முறை ஆகியவற்றை உள்ளடக்கியது' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com