தெரியுமா?

தூரத்தில் இருந்தே ஒரு நபரின் இதயத்துடிப்பை கண்டறியும் கருவியை மும்பை ஐ.ஐ.டி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
தெரியுமா?

இதயத் துடிப்பை அறியும் கருவி

தூரத்தில் இருந்தே ஒரு நபரின் இதயத்துடிப்பை கண்டறியும் கருவியை மும்பை ஐ.ஐ.டி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் இப்போது கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய் பாதிக்கப்பட்டவரின் அருகில் செல்லும் போது மற்றவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மருத்துவ குழுவினர் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில் தூரத்தில் இருந்தே ஒருவரின் இதயத்துடிப்பை கண்டறியும் கருவியை மும்பை ஐ.ஐ.டி குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். இந்த கருவியானது செல்போன்களில் இருப்பது போன்றே புளூடூத் தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. 

நோயாளிகளின் இதயத்துடிப்பை தூரத்தில் இருந்தே கணக்கிட்டு அதை மின் காந்த அலைகளாக மாற்றி டாக்டரின் மூலம் பாதிக்கப்பட்டவரின் இதயத்துடிப்பை அறிந்து கொள்ள முடியும். இந்த கருவிக்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.

தற்போது பல்வேறு மருத்துவமனைகளுக்கு இக்குழுவினர் நவீன ஸ்மார்ட் ஸ்டெதஸ் கோப்பை வழங்கி உள்ளனர். 

-கோட்டாறு ஆ.கோலப்பன்


எலிக்கு தங்கப்பதக்கம்!

கம்போடியாவில் எலிக்கு சமீபத்தில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அத்துடன் எலி சாப்பிடுவதற்கு தர்ப்பூசணி வழங்கப்பட்டது. 

எலிக்கு என் தங்கப்பதக்கம் வழங்கினார்கள். காரணம் உண்டு. 

கம்போடியாவில் ஒரு காலத்தில் ஏராளமான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. மற்றும் வெடிக்க ஏதுவாய் குண்டுகளும் புதைக்கப்பட்டன. இப்படி 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும், இந்த எலி தன் மோப்ப சக்தியால் கண்டுபிடித்து பலருடைய உயிரை காத்துள்ளது.

சேவை நிறுவனம் ஒன்று  கண்ணி வெடிகளை கண்டுபிடிப்பதற்காக இந்த எலியை பழக்கப்படுத்தியுள்ளது. 

எலிக்கு எப்படி கண்ணி வெடியால் பாதிப்பு ஏற்படவில்லை தெரியுமா?

எலி மிகச் சிறியதாக இருப்பதாலும் விரைவாக ஓடி வந்துவிடுவதாலும் அதற்கு பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. 

ஒரு டென்னிஸ் கோர்ட் அளவை எலி ஒரு மணி நேரத்தில் சோதித்து விடுகிறது. இதனை மனிதன் கருவி மூலம் சோதனை செய்ய நான்கு நாள்கள் ஆகுமாம்.
இந்த சாமர்த்திசாலி எலியின் பெயர் என்ன தெரியுமா? மகாவா!

-ராஜிராதா

எல்லாமே ஸ்பெஷல்

இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் பிரபலமான உணவை ஒரே இடத்தில் தருகிறார்கள் என்றால் ஆச்சரியம் தானே!

புதுதில்லி அவுட்டர் சர்க்கிள் பகுதியில் அமைந்துள்ள  உணவகத்தில் ன்ய்ண்ற்ங்க் ஐய்க்ண்ஹய் ற்ட்ஹப்ண் என்ற பெயரில் சிறப்பான உணவு வகைகளை தயாரித்து மக்களுக்கு வழங்குகிறார்கள்.

குறிப்பாக நாண், பன்னீர் பட்டர் மசாலா, பூரி,  கோங்குரா பச்செடி, பிசிபேளா பாத், கடலை கறி, பருப்பு தால், புதினா சட்னி, மிளகு ரசம், சுட்ட அப்பளம் போன்றவற்றை இந்தியா வடிவில் அமைப்பட்ட மிகப்பெரிய தட்டில் பரிமாறுகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தை குறிக்கும் வரைப்படத்தில் அந்தந்த மாநிலத்தின் பிரபலமான உணவுகளை வைத்து அழகுப்படுத்தி பார்வையாளர்கள் அசர வைக்கிறார்கள். 

உணவு வகைகளை நாம் சாப்பிட்டு முடித்ததும் இறுதியாக ரசகுல்லா, ஜவ்வரிசி பாயாசம் வழங்குகிறார்கள். 6 பேருக்கு போதுமான அளவு இந்த உணவு வழங்கப்படுகிறது. நேரில் வந்து சாப்பிடுபவர்களிடம் 1999 ரூபாய் உணவுக்கட்டணமாக வசூலிக்கிறார்கள். வீட்டிலிருந்து ஆர்டர் செய்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சிறப்பு உணவு வகைகள் பற்றிய விடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

-ஜெ

மனோரமாவை பாராட்டிய பானுமதி


1988-இல் ஏவி.எம் "பாட்டி சொல்லைத் தட்டாதே' என்ற படம் எடுத்தது. இதில் மனோரமா பாட்டியாகவும், எஸ்.எஸ்.சந்திரன் தாத்தாவாகவும் நடித்தனர். இதில் பாண்டியராஜன் கதாநாயகன்.

இதில் சண்டைக்காட்சிகளில் கமல், ரஜினி போல மனோரமாவும் வில்லன்களைப் பந்தாடியிருப்பார். கார் சேஸிங், கம்பு மற்றும் குத்துச்சண்டை என பல உண்டு. இவற்றில் மனோரமா ஜமாய்க்க படம் சூப்பர் ஹிட். 

தெலுங்கில் தயாரித்த போது மனோரமா வேடத்தில் நடித்த பானுமதி, தமிழில் மனோரமா நடிப்பைப் பார்த்து வியந்து "மனோரமா போல என்னால் இவ்வளவு சிறப்பாக நடிக்க முடியாது' என்றாராம்.  

-ராஜேஸ்வரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com