கருணை உள்ளங்களின் கல்வி சேவை!

பல குடும்பங்களில் சிறப்பாகப் படிக்கும் மாணவ மாணவியர் மருத்துவ, பொறியியல், வேளாண்மை கல்லூரிகளில்  மதிப்பெண் அடிப்படையில்  படிக்க இடம் கிடைத்தாலும்  எல்லாராலும் கல்லூரிகளில் சேர்ந்து விட முடிவதில்லை.
கருணை உள்ளங்களின் கல்வி சேவை!

பல குடும்பங்களில் சிறப்பாகப் படிக்கும் மாணவ மாணவியர் மருத்துவ, பொறியியல், வேளாண்மை கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் படிக்க இடம் கிடைத்தாலும் எல்லாராலும் கல்லூரிகளில் சேர்ந்து விட முடிவதில்லை. அவர்களால் கல்விக் கட்டணம் கட்ட முடியாத சூழ்நிலைதான்காரணம்.

அரசு மருத்துவ, பொறியியல், வேளாண்மை மற்றும் இதர கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் இடம் கிடைத்து கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு உதவிக் கரத்தை 2002லிருந்து . நீட்டி பலரது வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்திருக்கிறது "முகவரி' கல்வித் தொண்டு நிறுவனம். "முகவரி' நிறுவனத்தைத் தொடங்கிய ரமேஷ் தனது பயணம்பற்றிச் சொல்கிறார்:

"நான் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊரை அடுத்துள்ள ஆரத்தி அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவன். அரசுக் கல்லூரியில் கணிதம் பட்டப்படிப்பை முடித்து "சார்ட்டட் அக்கெளன்டன்சி' படிக்க ஆரம்பித்தேன். அந்தப் படிப்பிற்கு உதவித் தொகை கிடைக்கும். அப்போது எனது கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு மருத்துவத் தேர்வுக்குத் தயார் செய்ய பயிற்சி வகுப்புகளில் சேர 2002-இல் பண உதவி செய்தேன்.

அந்த மாணவி தகுதித் தேர்வில் தேறி, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கக் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவித்தார். அவரது நிலைமையை அறிந்ததும், திரைப்பட இயக்குநர் முருகதாûஸ அணுகி உதவி கேட்டேன். அவரும் உதவி செய்ய முன்வந்தார். அவரது உதவியால் அந்த மாணவி மருத்துவரானார். அப்போதுதான் கல்விக் கட்டணம் கட்ட பணம் இல்லாமல் போனாலும், பண உதவி செய்ய யாராவது முன்வந்தால் நினைத்த படிப்பை பொருளாதாரத்தில் தங்கிய மாணவன் அல்லது மாணவியால் படிக்க முடியும் என்று தெரிய வந்தது.

தொடந்து நல்ல மதிப்பெண்கள் இருந்தும் பணக் கஷ்டத்தால் படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவலாம் என முடிவு எடுத்தேன்.

"முகவரி' தொடங்கப்பட்ட 19 ஆண்டுகளில் 518 மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி பயில அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் 143 மாணவ மாணவிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் பயின்றுள்ளார்கள். 70 மாணவ மாணவிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வருகின்றனர். 21 மாணவ மாணவிகள் கோவை அரசு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். இவை எல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த கருணை உள்ளவர்களால் நிகழ்ந்த அற்புதங்கள்.

"முகவரி'யின் உதவியால் படித்தவர்களில் 162 பேர் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்துவருகிறார்கள். பலர் முகவரியின் தொண்டு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பங்களிப்பு செய்து வருகிறார்கள்.

மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் எடுப்பார்கள். சிலர் "முகவரி'யின் உதவி பெற்று படிக்கும் மாணவ மாணவிகள் எப்படிப் படிக்கிறார்கள் என்று கண்காணிப்பார்கள். இதர கல்வித் தொண்டு நிறுவனத்திற்கும் "முகவரி'க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் அரசுக் கல்லூரிகளில் படிக்க ஸீட் கிடைத்த மாணவ மாணவிகளுக்கு மட்டுமே உதவுவோம். அதுவும் மாணவ மாணவிகளை நேர்காணல் செய்து, உண்மையிலேயே பொருளாதார சிக்கல் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்று விசாரித்து உறுதி செய்வோம். பெற்றோர்கள் இல்லாதவருக்கு முதல் முன்னுரிமை.. பிறகு தந்தையோ தாயோ இல்லாதவருக்கு முன்னுரிமை... தருவோம்.

என்று சொல்லும் ரமேஷிற்கு 42 வயதாகிறது. திருமணம், குடும்பம் என்றில்லாமல், கல்விஉதவிகளைச் செய்வதே வாழ்க்கை என்றுமாற்றிக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com