போனவர் திரும்பி வரவில்லை!

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசுக்கு எதிராக செயல்பட்டவர் பாலகங்காதர திலகர்.
போனவர் திரும்பி வரவில்லை!

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேய அரசுக்கு எதிராக செயல்பட்டவர் பாலகங்காதர திலகர். அவருடைய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் காவலர் ஒருவரை உளவு வேலை பார்க்க நியமித்தது. தான் உளவாளி என்பதை காட்டிக் கொள்ளாமல் திலகர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார் அந்த காவலர்.

அவ்வப்போது ஆங்கில அரசுக்கு திலகர் பற்றி தகவல்களையும் தெரிவித்து வந்தார். ஆறு மாதம் காலம் முடிந்த பிறகு திலகரிடம், அந்த காவலர் வந்து " ஐயா நான் வந்து ஆறு மாதம் ஆகிவிட்டது., எனக்கு சம்பளம் பத்தவில்லை. கூட்டி தருமாறு கேட்டார்'. திலகர் சிரித்துக்கொண்டே சில விநாடிகளில் அந்த காவலருக்கு பதில் சொன்னார்.

"நீ என்னை நல்ல முறையில் பார்த்துக்கொள்வதற்காக மாதம் ஆறு ரூபாய் சம்பளமாக தருகிறேன். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதை விட அதிகமாக, இருபத்தி நான்கு ரூபாய் தருவது உனக்கு பத்தவில்லையா?' என்று எதிர் கேள்வி கேட்டார்.

அன்று இரவு நான் வெளியில் சென்று சாமான்களை வாங்கி வருகிறேன் என்று திலகரிடம் சொல்லி சென்ற காவலர் மீண்டும்வரவேயில்லை. அப்படியே காணாமல் போய்விட்டார். உயிருக்கு பயந்து பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தஞ்சம் அடைந்துவிட்டார் அந்த காவலர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com