முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
மூன்றெழுத்துக்கு விளக்கம்
By என். சுப்பிரமணியன் | Published On : 19th December 2021 06:00 AM | Last Updated : 19th December 2021 06:00 AM | அ+அ அ- |

1956 ஜுன் 26 சென்னை செயிண்ட் மேரீஸ் மண்டபத்தில் எனது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவிலே நான் முதன் முதலாக எம்.ஜி.ஆரைச் சந்தித்தது நினைவில் இருக்கிறது. அந்த ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவை பொன் விழாவாகத் தமிழரசு கழகத்தார் நடத்தினர்.
கோலாகலமாக நடந்த அந்த விழாவிலே எம்.ஜி.ஆர் கலந்து கொண்டு எனக்கு வாழ்த்து கூறினார். அந்த விழாவிலே ம.பொ.சி என்ற மூன்றெழுத்துக்கு விளக்கம் கூறினார். தமிழை மழை போல் பொழியும் சிவஞானம் என்று அவர் கூறியபோது அந்த மண்டபத்தில் இருந்த மக்கள் அனைவருடைய கைத்தட்டல் மண்டபத்தை அதிரச் செய்தது. இன்னும் என் கண் முன்னே காண முடிகிறது. காதுகளால் கேட்க முடிகிறது.
நான் திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்த காலத்தில் கூட எங்கள் இருவரிடையே பகைமை தோன்றியதே கிடையாது.
அதற்குப்பிறகு அவர் தனியாக ஒரு கட்சியை துவக்கியபோது நான் அந்த கட்சிக்கு மாறுபட்டு மிகக் கடுமையாக பிரச்சாரம் செய்தேன். அப்போது அவரை பத்திரிகை நிருபர்கள் சந்தித்து," ம.பொ.சி தங்கள் கட்சியைத் தாக்குகிறாரே' என்று கேட்ட போது "அவர் என் மதிப்பிற்குரிய பெரிய தலைவர். அவரைப் பற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை' என அவர் சொன்னது அவருடைய பண்பாட்டை காட்டியது என்பதை நான் நன்றாக உணர்கிறேன்.
(எம்.ஜி.ஆர் பற்றி டாக்டர் ம.பொ.சி கூறியவை)