90 வயதில் முனைவர் பட்டம்

சென்னையைச் சேர்ந்தவர் ஸ்டனிஷ்லாஸ். 90 வயதிலும் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 
90 வயதில் முனைவர் பட்டம்

சென்னையைச் சேர்ந்தவர் ஸ்டனிஷ்லாஸ். 90 வயதிலும் படிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

முனைவர் பட்டம் பெற்ற அனுபவம் குறித்து கேட்ட போது சொன்னார்: 

""என்னுடைய சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள சிறுகிராமம். பள்ளிப் படிப்பை முடித்த நான் சர்வேயர் பயிற்சி பெற்றேன். அரசு நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று சர்வேயராகப் பணியாற்றினேன். தொடர்ந்து மும்பையில் பணியாற்றினேன். 1953- ஆம் ஆண்டு பாதுகாப்பு துறையின் பொறியாளராகப் பணியில் சேர்ந்தேன். 1989-ஆம் ஆண்டுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.

என்னுடைய சிறுவயதிலேயே அப்பா, அம்மாவை இழந்துவிட்டேன். அதனால் எப்போதுமே படிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் விரும்பியதைப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி  2005-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ சமூகவியல் பட்டம் பெற்றேன். 2008-ஆம் ஆண்டு திருப்பதி வெங்டேஸ்ரா பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி முழு நேர வகுப்பில் சேர்ந்து சட்டம் படித்தேன்.

2011-ஆம் ஆண்டு வழக்குரைஞராக சென்னை பார் கவுன்சிலில் பதிவு செய்தேன். 9 ஆண்டுகளில் என்னால் முடிந்த வரை பிறருக்கு சட்ட உதவிகள் செய்து வருகிறேன்.    2014-ஆம் ஆண்டு எம்.ஏ சட்டப்படிப்பை ஆச்சார்யா நாகர்ஜுனா பல்கலைக்கழகத்தில் முடித்தேன். 

2020 சட்டப்படிப்பில் பி.ஹெச்.டி 3 ஆண்டு 2 மாதம் 10 நாள்களில் முடித்தேன். 20 நபர்கள் என்னுடன் தேர்வு எழுதினார். அதில் முதல் நபராக முனைவர் பட்டம் பெற்றேன். 90 வயதில் இது சாதனையாகும்'' என்கிறார் ஸ்டனிஷ்லாஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com