அஞ்சல் குறியீட்டு எண்

அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அஞ்சல் குறியீட்டு எண்


அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972 -இல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும்.

உதாரணமாக, புதுதில்லி , ஜம்மு - காஷ்மீர் , பஞ்சாப் , இமாசலப் பிரதேசம் , ஹரியாணா, சண்டிகர் ஆகியவைகளுக்கு தொடக்க எண் 1 ஆக இருக்கிறது.
உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலத்திற்கு தொடக்க எண்ணாக 2 இருக்கிறது.

ராஜஸ்தான் , குஜராத் , டையூ -டாமன், நாகர்ஹவேலி பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 3 இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் , கோவா , மகாராஷ்டிரம் ஆகியவைகளுக்கு தொடக்க எண்ணாக 4 இருக்கிறது.

ஆந்திரப் பிரதேசம் , கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 5 இருக்கிறது.

தமிழ்நாடு , கேரளா , இலட்சத்தீவு , மினிகாய்த்தீவு ஆகிய பகுதிகளுக்கு தொடக்க எண்ணாக 6 இருக்கிறது.

ஒரிசா , அந்தமான் - நிகோபார் , மேற்கு வங்காளம் , மிசோரம் , மேகாலயா , மணிப்பூர் , நாகலாந்து , அசாம் , அருணாச்சலப் பிரதேசம் , திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 7 இருக்கிறது.

பீகார் , ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தொடக்க எண்ணாக 8 இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com