தற்செயலாக எழுந்த சரணாலயம்!

தற்செயலாக எழுந்த சரணாலயம்!

1986-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அனுமின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ மற்றும் ரியாக்டர் வெடிப்பால் பேரழிவு ஏற்பட்டது.


1986-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அனுமின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ மற்றும் ரியாக்டர் வெடிப்பால் பேரழிவு ஏற்பட்டது. ஹிரோஷிமா குண்டுவெடிப்பை விட 400 மடங்கு அதிக கதிரியக்கப் பொருள்கள் வெளியாயின.
செர்னோபில் மற்றும் அருகில் இருந்த ப்ரிபியாட் நகரங்களில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வசித்து வந்தனர்.
அடுத்த நாள் பிற்பகல் ஏராளமான பஸ்கள் கொண்டு வரப்பட்டன. 3 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது.  முக்கியமான உடமைகளை எடுத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் ஊரை காலி செய்து கொண்டு புறப்படலாம் என அரசு அறிவித்தது. மொத்த ஊரும் காலியானது.  ஆனால் இன்று கூட அங்கு 15 பேர் வருவது வரட்டும் என விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இன்று 35 ஆண்டுகள் கடந்துவிட்டன. 
இன்றைய நிலைக்குச் செல்லும் முன் செர்னோபில் குறித்து விஞ்ஞானிகள் கூறிய கருத்து:
மனிதர்கள் 24 ஆயிரம் வருடங்களுக்கு வசிக்க இயலாது என்பது தான். 15 மனிதர்கள் மட்டுமல்ல... இன்று செர்னோபில் பகுதியில் ஏராளமான சாம்பல் ஓநாய்கள் காட்டெருமைகள், கரடிகள், பெரிய பெரிய காட்டு வகை மான்கள், காட்டுக்குதிரைகள் மற்றும் 231 வகையான பறவைகள் வசிக்கின்றன. உண்மையை கூற வேண்டுமானால் கட்டடங்களிலும் வீடுகளிலும் மிருகங்களே வசிக்கின்றன. 
இந்த மிருகங்களில் காட்டுக்குதிரை மட்டும் திட்டமிட்டு இங்கே திணிக்கப்பட்டது ஏன்?
கைவிடப்பட்ட இடத்தில் மனிதர்கள், வாகனங்கள், நடமாடாததால், புற்கள் பிரம்மாண்டமாக வளர்நது தீவிபத்துகளுக்கு வழி செய்து விடும் என பயந்து அந்த புற்களை சாப்பிட்டு அவ்வவ்போது அழிக்க குதிரைகளை கொண்டு வந்து விட்டனர். இந்த காட்டுக் குதிரை ரகங்களின் பெயர் "பிஷ்வால்ஸ்கி'.
அது என்ன பிஷ்வால்ஸ்கி? உண்மையில் அது ஒரு விஞ்ஞானியின் பெயர். அவர் தான் இதனை முதன் முதலில் கோபி பாலைவனத்தில் கண்டுபிடித்தார். வேட்டையாடப்பட்டு கடந்த நூற்றாண்டுக்குள் முழுமையாக அழிந்துவிடும் என கணக்கிடப்பட்ட குதிரை இது.
அவற்றில் 30 ஐ செர்னோபில்லில் கொண்டு வந்து இறக்கினர். அணு வெடிப்பு தீய பொருள்கள் எதுவும் இதனை பாதிக்கவில்லை. பலன் இன்று இவற்றின் எண்ணிக்கை 150-ஐ தாண்டிவிட்டது. ஆக இன்று இந்த ஏரியாவே சரணாலயமாக மாறிவிட்டது. அது மட்டுமல்ல. இப்போது செர்னோபில் காட்சி பொருளாகிவிட்டது. சுற்றுலா பயணிகள் காலையில் வந்து மாலையில் திரும்பிச் செல்வது போல் அழைத்து வரப்பட்டு கைவிடப்பட்ட நகரத்தை பார்வையிட்டபின் அழைத்துச் செல்கின்றனர்.
2018-இல் 70 ஆயிரம் பேரும் 2019-இல் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் இந்த இடத்துக்கு ஒரு பயத்துடனேயே சுற்றுலா பயணிகளாக வந்து திரும்பிச் செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com