வெப்ப  சூழ்நிலையில் ஆப்பிள்  மரங்கள்

இன்று வெப்பமான  சூழ்நிலையில்  வளர்ந்து, ஆப்பிள் பழங்களைத் தரும்  ஆப்பிள்  செடிகள்  விற்பனைக்கு  வந்துவிட்டன. 
வெப்ப  சூழ்நிலையில் ஆப்பிள்  மரங்கள்


இன்று வெப்பமான சூழ்நிலையில் வளர்ந்து, ஆப்பிள் பழங்களைத் தரும் ஆப்பிள் செடிகள் விற்பனைக்கு வந்துவிட்டன.

ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிமன் ஷர்மா என்ற விவசாயி இந்த அறிய வகை ஆப்பிள் செடிகளை உருவாக்கியிருக்கிறார்.

ஆப்பிள் மரங்கள் செழிப்பாக வளர காஷ்மீர், ஹிமாச்சல் பகுதிகளில் நிலவும் குளிரான காலநிலை அவசியம். அதனால் அந்த பகுதியில் மட்டும்தான் விளையும். காஷ்மீர், ஹிமாச்சல் அல்லாத நிலங்களில் என்னதான் முயற்சி செய்து பார்த்தாலும் ஆப்பிள் விளைவிக்க முடியாது. இது நேற்றைய நிலைமை !
சுவையில், தரத்தில் காஷ்மீர் , ஹிமாச்சல் ஆப்பிள்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஆப்பிள்களை தென்னிந்திய மாநிலங்களிலும் பயிரிட்டு விளைவிக்க முடியும் என்ற சாத்தியத்தை ஹரிமன் உருவாக்கியுள்ளார்.

‘HRMN99' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆப்பிள் செடிவகை தற்சமயம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இந்த வகை செடிகள் பூக்க, காய்க்க அதிகப்படியான குளிர் தேவையில்லை என்பதுதான் குறிப்பிட வேண்டிய அம்சம். இந்திய வேளாண்மை விஞ்ஞானிகள் செய்யாத சாதனையை ஹரிமன் ஷர்மா சாதித்துள்ளார். இந்த சாதனை பல விருதுகளை ஷர்மாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது..!

இந்த ஆப்பிள் செடிகள் புதுக்கோட்டை "குகில்' பண்ணையில் கிடைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com