பலே பந்து வீச்சாளர்

இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலேயே மிகவும் அரிய நிகழ்வாக 100 டெஸ்ட் ஆட்டங்களை ஆடிய பந்துவீச்சாளர்  என்ற சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் ஆனார் இஷாந்த் சர்மா.
பலே பந்து வீச்சாளர்

இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலேயே மிகவும் அரிய நிகழ்வாக 100 டெஸ்ட் ஆட்டங்களை ஆடிய பந்துவீச்சாளர்  என்ற சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் ஆனார் இஷாந்த் சர்மா.

கடந்த சில ஆண்டுகளாக வேகப்பந்து வீச்சில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. இஷாந்த், பும்ரா, ஷமி ஆகிய மும்மூர்த்திகள் பந்துவீச்சால் தலைசிறந்த பேட்ஸ்மேன்களே திணறி வருகின்றனர். உலகின்  தலைசிறந்த வேகப்பந்துவீச்சு கூட்டணி  என்ற சிறப்பை பெற்றுள்ளது.

100-ஆவது டெஸ்ட் ஆட்டம்:

1983-இல் முதன்முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன் கபில்தேவ் கடந்த 1978 முதல் 1994-ஆம் ஆண்டு வரை மொத்தம் 100 டெஸ்ட் ஆட்டங்களில் ஆடிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். சிறந்த ஆல்ரவுண்டரான கபில்தேவ் மொத்தம் 131 டெஸ்ட் ஆட்டங்களில் ஆடினார். மொத்தம் 434 விக்கெட்டுகளை வீழ்த்திருந்தார்.
இஷாந்த் சர்மா:

இந்நிலையில் 100 டெஸ்ட் ஆட்டங்கள் ஆடிய இரண்டாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை படைத்தார் இஷாந்த் சர்மா. குஜராத் மாநிலம் ஆமதாபாதில் பிப். 24-ஆம் தேதி தொடங்கிய இந்திய-இங்கிலாந்து இடையிலான 3-ஆவது டெஸ்ட் ஆட்டமே அவரது 100-ஆவது டெஸ்ட்டாக அமைந்தது.

32 வயதான இஷாந்த் பல்வேறு காயங்கள் ஏற்பட்ட போதிலும் தீவிர முயற்சியால் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 இந்திய அணியில்  அவர் பங்கேற்று ஆடி  பல ஆண்டுகள் ஆகி விட்டன.

302 டெஸ்ட் விக்கெட்டுகள்:

தில்லியைச் சேர்ந்த இஷாந்த் 2007-இல் இந்திய அணியில் இடம் பெற்றார். வலதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர், டெஸ்ட் ஆட்டத்தில் இதுவரை 99 டெஸ்ட்களில் 302 விக்கெட்டுகளையும்,

ஒருநாள் ஆட்டத்தில் 115 விக்கெட்டுகளையும், டி20-இல் 8 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். டெஸ்டில் அவரது சிறந்த பந்துவீச்சு 7/74 ஆகும்.

152.6 கி.மீ வேகம்:

கடந்த 2008-இல் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இளம் வீரரான இஷாந்த் 152.6 கி.மீ வேகத்தில் பந்து வீசினார். இதன்மூலம் அதிவேகத்தில் பந்துவீசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். பல்வேறு நாடுகளில் நிலவும் சவாலான சூழலிலும் நீண்ட நேரம் நிலைத்து பந்துவீசும் திறன் பெற்றவர் இஷாந்த்.

இஷாந்த் சர்மாவுக்கு பின் வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரும் 100-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடினார்கள் என்ற சாதனை தகர்க்கப்படாது. விராட் கோலி தலைமையின் கீழ் ஆடும் இஷாந்த் ஆக்ரோஷ பவுலராக மாறினார். மேலும் சில ஆண்டுகள் டெஸ்ட் ஆட்டங்களில் இஷாந்த் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com