சமூகத்தை மாற்றிய விளையாட்டு!

வன்முறையான சமூகத்தை, விளையாட்டு என்ற விஷயத்தால் மாற்ற முடியும் என்பதை செய்து பலரது பார்வையைத் தங்கள் மீது திருப்பி காட்டியிருக்கிறார்கள் சாதாரண மனிதர்களான உமாபதி, தங்கராஜ்.
சமூகத்தை மாற்றிய விளையாட்டு!

வன்முறையான சமூகத்தை, விளையாட்டு என்ற விஷயத்தால் மாற்ற முடியும் என்பதை செய்து பலரது பார்வையைத் தங்கள் மீது திருப்பி காட்டியிருக்
கிறார்கள் சாதாரண மனிதர்களான உமாபதி, தங்கராஜ்.

எப்படி இது சாத்தியமானது? 

தங்கராஜிடம் பேசினோம்: 

""நான் பிறந்து வளர்ந்தது வியாசர்பாடி பகுதி தான். காலையில் எழுந்திருக்கும் போது எங்கள் பகுதியில் ஏதாவது பிரச்னை அன்றாடம் பார்ப்பது வழக்கமாக இருந்தது. எங்கள் பகுதியிலுள்ள சிறுவர்கள் பெரும்பாலும் பள்ளிக்குச் செல்வதில்லை. அவர்களை வைத்து பல செயல்களை  வெளியில் இருப்பவர்கள் செய்து வந்தார்கள். படித்தவர்கள் அதிகம் கிடையாது.

எங்கள் பகுதியிலுள்ள மாணவர்கள் படிப்பதற்கு முயற்சி செய்தும் யாரும் வரவில்லை. வன்முறை சூழலில் வளர்ந்த அவர்களால் படிக்க முடியவில்லை. விளையாட்டு மூலமாக அவர்களை அழைக்கலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் பகுதியில் பிரிட்டிஷ்காரர்கள்  விளையாடும் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டு. கால்பந்து விளையாட அழைத்த போது வந்தார்கள். 
1997-ஆம் ஆண்டு குடிசை வாழ் குழந்தைகளின் விளையாட்டு கல்வி மேம்பாட்டு மையத்தை நானும், நண்பர் உமாபதியும் சேர்ந்து துவங்கினோம். விளையாட வந்த சிறுவர்களிடம் கீழ்ப்படிதல் குணத்தைச் சொல்லிக் கொடுத்தோம். மாறினார்கள். 

பள்ளியில் சேர்ந்து படிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். படிக்கச் சென்றார்கள். வேலைக்குச் செல்லும் குழந்தைகளை அழைத்து  "நீ அதிகம் படித்தால் இதைவிட நல்ல வேலை கிடைக்கும்' என சொல்லி படிக்க வைத்தோம். அவர்கள் பெற்றோர்களை அழைத்துப் பேசினோம். ஆனாலும் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ஒழுக்கம், மரியாதை, கட்டுப்பாடு, கீழ்ப்படிதல் போன்ற நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தோம்.
2000-ஆம் ஆண்டில் எங்கள் பகுதியில் பத்தாவது ரிசல்ட் வரும் போது பாஸானவர்கள் யாரும் இல்லை. கடந்த ஆண்டு பத்தாவது ரிசல்ட் எடுத்துக்கொண்டால் பெயிலானவர்கள் யாரும் இல்லை. கால ஓட்டத்தில் வீட்டுக்கு ஒரு பட்டதாரியாக மாறியிருக்கிறார்கள். ஏன் மருத்துவப் படிப்பு படிக்கும் அளவு முன்னேறியிருக்கிறார்கள். 

மேலும் இந்த காலகட்டத்தில் நாங்கள் வலுவான கால்பந்து அணியை உருவாக்கினோம். ஸ்வீடனில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கு கொண்டு கோப்பையை வென்றோம். கடந்த 20 ஆண்டுகளில்  பல மாணவர்களின் வாழ்க்கை பாதை மாறியுள்ளது. எனவே கால்பந்து விளையாட்டு மீது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

இதுவரை எங்கள் பகுதியில் 10 ஆயிரம் பேர்கள் கால்பந்து, டென்னிஸ், கேரம், செஸ், பேட்மிட்டன் போன்ற பயிற்சிளைப் பெற்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதனை செய்து வருகிறார்கள். காலை 6 மணி முதல் 9 மணிவரையிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை கால்பந்து பயிற்சி அளிக்கிறோம். பெண்கள் விரும்பி வந்து கால்பந்து பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். "பிகில்' படம் போன்று ஒவ்வொரு வீராங்கனைக்குப் பின்பும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. அதைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் தனிப் புத்தகமே எழுத வேண்டும். இதற்காக நாங்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. 

கால்பந்து அவ்வளவு எளிதான விளையாட்டு அல்ல. களத்தில் இருக்கும் போது அதிக கவனம் தேவை. சிறு தவறு கூட வெற்றி வாய்ப்பை பறித்துவிடும். ஒருவர் சிறந்த கால்பந்து வீரராக வர வேண்டுமென்றால் கடினமான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஊட்டசத்து மிகுந்த உணவு தேவை. ஏழை, எளியவர்களுக்கு நல்ல உணவு கிடைப்பதில்லை. ஆனாலும் எங்களால் முடிந்த பயிற்சிகளை அளிக்கிறோம். 
அதனை கற்றுக்கொண்டு அவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது.  எங்களிடம் பயிற்சி பெற்றவர்களில் கார்த்தி என்ற வீரர் மூன்றுமுறை  ஸ்பெயின் அணியுடன் விளையாடியுள்ளார். நந்தகுமார் என்ற வீரர் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். எந்த நோக்கத்திற்காக நாங்கள் விளையாட்டு கல்வி மேம்பாட்டு மையத்தை ஆரம்பித்தோமோ அதில் 60 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளோம். 

வியாசர்பாடி போன்ற சற்றே பின் தங்கிய பகுதியிலுள்ள மாணவர்கள் வருங்காலங்களில் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் நல்ல சூழ்நிலையில் வளர வேண்டும். அவர்களைச் சுற்றியுள்ள சமூகம் மாற வேண்டும். அதற்காக நாங்கள் கையில் எடுத்திருக்கும் மந்திரக்கோல் தான் விளையாட்டு'' என்கிறார் தங்கராஜ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com