வித்தியாசமான திருமணம்

திருமணம் என்றால் மணப்பெண் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவது தான் வழக்கம். ஆனால் மும்பையைச் சேர்ந்த இளம் தம்பதிள் இதனை மாற்றியமைத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். 
வித்தியாசமான திருமணம்

திருமணம் என்றால் மணப்பெண் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவது தான் வழக்கம். ஆனால் மும்பையைச் சேர்ந்த இளம் தம்பதிள் இதனை மாற்றியமைத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். 

மும்பையைச் சேர்ந்தவர்கள் தனுஜா, ஷர்துல். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஒரே கல்லூரியில் படித்த போது தான் இருவரும் முதன்முதலில் சந்தித்து கொண்டுள்ளனர். படிக்கும் காலத்தில் அவர்கள் காதலிக்கவில்லை. இருவருக்கும் இடையே, பட்டம் பெற்ற நான்கு ஆண்டுகள் கழித்து தான் காதல் மலர்ந்தது. அதுவும் வலைத்தளங்கள் மூலம். பின்பு இருவரும் ஒருமனதாக திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.

செப்டம்பர் 2020-இல், கரோனா வைரஸ் தொற்றுநோயின் முதல் அலை தணிந்ததால், அவர்கள் தங்கள் திருமணத்தைத் திட்டமிடத் தொடங்கினர். டிசம்பரில் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்து இருக்கின்றனர். கூடவே "நான் தான் தாலி கட்டுவேன்' என்று தனுஜா கூற பெற்றோர் ஆச்சரியப்பட்டனர் மற்றும் உறவினர்கள் அவர்களது முடிவை பற்றி கேள்வி எழுப்பினர். ஆனால், தாலி அணிவது சமத்துவத்தை குறிக்கிறது என்று கூறி அவர்களை வாயடைக்க செய்துவிட்டார்.

எனினும், எதிர்ப்புகள் தொடர்ந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் தனுஜா, ஷர்துலிடம் திருமணத்திற்குப் பிறகு தாலி அணிந்துகொள்ளும் நிகழ்வை வைத்துக்கொள்ளலாம் என கூறியிருக்கிறார். ஆனால் ஷர்துல் ஒரேஅடியாக அதற்கு மறுப்பு தெரிவிக்க, இறுதியாக திருமணம் எந்தவித சச்சரவும் இன்றி நடந்து முடிந்துள்ளது. தற்போது ஷர்துல் கருப்பு கயிற்றில் டாலர் அணிந்த தாலியை அணிந்துள்ளார். நான்கு மாதங்களை கடந்த இந்த வித்தியாசமான திருமணம் பற்றி பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்புகளும் வந்தன. இது பற்றி ஷர்துல் சொல்கிறார்:

"சமூகவலைத்தளங்களில் வந்த விஷயங்களால் முதலில், தனுஜா பாதிக்கப்பட்டார், ஆனால் இப்போது 4 மாதங்கள் கடந்துவிட்டன.தனுஜாவும் நானும் மட்டுமே எங்கள் உறவை வேறு எவரையும் விட சிறப்பாக வரையறுக்க முடியும் இந்த பயணத்தில் ஒன்றாக இருக்கிறோம். எனவே, உலகம் என்ன நினைக்கிறது என்று கவலைப்படப் போவதில்லை' என்கிறார் ஷர்துல்.

""ஷர்துல் பெண்களை அதிகம் மதிப்பவர். நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். அப்போது காதலிக்கவில்லை. படிப்பு முடிந்த பிறகு முகநூல் மூலமாக பேசும் போது அவருடைய எண்ணங்களை வெளிப்படுத்தினார் ஷர்துல். அவர் ஒரு பெண்ணியவாதி என்று தெரிந்ததும் தான் அவர் மேல் ஈர்ப்பு வந்தது. அப்போது நான் உங்களுக்கு தாலி கட்டவா? என்று கேட்டதும் ஏன் தாராளமாக ஏற்றுக்கொள்கிறேன் என்று திருப்பிக் கேட்டு என்னை ஆச்சரியப்படுத்தினார். ஆண் சமூகத்திற்கு ஷர்துல் ஒரு முன்னோடி. இன்றைய இளைய தலைமுறை பெண்கள் ஷர்துல் போன்ற ஆண்களை தான் அதிகம் விரும்புகிறார்கள். அடிமைத் தனம் செய்யும் ஆண் வர்க்கத்தை பெண்கள் அதிகம் விரும்புவதில்லை'' என்றார் தனுஜா இவர்களின் காதல் கதை "ஹுயூமன்ஸ் ஆப் பாம்பே' இணையத்தில் வெளியானது. இன்ஸ்டாகிராமில் 82,000 க்கும் மேற்பட்ட "லைக்குகள்' மற்றும் பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான லைக்குகள் பெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com