மாண்புமிக்க மெய்யறிவு

ஆப்ரிக்காவில் மருத்துவப் பணியாற்றிய ஆல்பர்ட் சுவைட்சர் திருக்குறளைக் கற்றுணர்ந்து அதன் கருத்துகளில் உள்ளந் தோய்ந்த சிந்தனையாளர்.
மாண்புமிக்க மெய்யறிவு


ஆப்ரிக்காவில் மருத்துவப் பணியாற்றிய ஆல்பர்ட் சுவைட்சர் திருக்குறளைக் கற்றுணர்ந்து அதன் கருத்துகளில் உள்ளந் தோய்ந்த சிந்தனையாளர். ஒழுக்கமே மனிதனுடைய உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை மிகுந்த உறுதியோடு வள்ளுவர் கூறியிருக்கிறார்.

ஒவ்வொருவரும் தமக்குத் தாமே செய்ய வேண்டிய கடமை என்ன, மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன என்பவற்றை யெல்லாம் சிறந்த பண்பாட்டோடும், மதிநுட்பத்தோடும் வள்ளுவர் பேசுகிறார். 

உலக இலக்கியத்தில் இத்துணை மாண்பு மிக்க மெய்யறிவு வேறு எந்த நூலிலும் இத்துணைச் சிறப்பாகப் பொலிவு பெறவில்லை என்று கூறலாம் என்பது ஆல்பர்ட் சுவைட்சரின் கருத்து.

"செயல் மூலமாகவும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய இயலுகிறதே! அதற்காகச் செயலில் ஈடுபடு' என்பது வள்ளுவர் இடும் கட்டளையாகும்' என்கிறார் ஆல்பர்ட்டு சுவைட்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com