ரததததின ததமே... - 35

"என்ன காரியம் செஞ்சிட்ட என் ரத்தமெல்லாம் கொதிக்குது' என்று அதிக கோபத்தைக் குறிப்பிட சிலர் ரத்தம் கொதிக்குது என்று சொல்வதுண்டு.
ரததததின ததமே... - 35


"என்ன காரியம் செஞ்சிட்ட என் ரத்தமெல்லாம் கொதிக்குது' என்று அதிக கோபத்தைக் குறிப்பிட சிலர் ரத்தம் கொதிக்குது என்று சொல்வதுண்டு. அதிக கோபத்தில் ரத்த அழுத்தம் ஏறுவதைத் தான் ரத்தம் கொதிக்குது என்று சொல்லப்படுகிறதே தவிர ரத்தம் கொதிப்பதில்லை. உலகிலேயே மிக அதிக வெப்பமான நாடு என்று சொல்லப்படும் மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள பர்கினா பேúஸா நாட்டில் வாழும் மக்களுக்குக் கூட ரத்தம் கொதிப்பதில்லை.

ஆனால் குளிர் ரத்த விலங்குகள், மற்றும் வெப்ப ரத்த விலங்குகள் என்று இரண்டு பிரிவுகளாக இயற்கையாகவே உலகத்தில் இருந்து வருகிறது. "ரத்தம் கொதிப்பதில்லை' என்று சொல்கிறீர்கள் அப்புறம் குளிர் ரத்தம் வெப்ப ரத்தம் என்று இரண்டு பிரிவைச் சொல்கிறீர்களே? எப்படி இது சாத்தியம்? என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும்.

உடலின் இயல்பு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி ஃபாரன்ஹீட்) காய்ச்சல் அடிக்குது என்று சொல்லும் சிலருக்கு வாயில் தெர்மாமீட்டரை வைத்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு வெப்பநிலை அதிகமாக இல்லை சரியாகத்தான் இருக்கிறது என்று சொன்னால் "எனக்கு உடம்பு உள்ளே சுடுகிறது உள்காய்ச்சல் அடிக்குது உங்க தெர்மாமீட்டர் சரியில்லை தப்பா காட்டுது' என்பார்கள். 37 டிகிரி செல்ஸியஸ் என்று சொன்னாலும் சரி அல்லது 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்று சொன்னாலும் சரி இரண்டு அளவுகளுமே ஒன்றுதான்.

செல்ஸியஸ் அளவு என்பது ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வானவியல் ஆய்வாளர் ஆன்டர்ஸ் செல்ஸியஸ் என்பவர் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த செல்ஸியஸ் அளவுப்படி தண்ணீர் 0 டிகிரி வெப்ப நிலையில் உறையும். 100டிகிரி வெப்ப நிலையில் கொதிக்கும். ஃபாரன்ஹீட் அளவு என்பது ஜெர்மன் விஞ்ஞானி கேப்ரியல் ஃபாரன்ஹீட் என்பவரது பெயரால் அழைக்கப்பட்டது. இந்த ஃபாரன்ஹீட் அளவுப்படி தண்ணீர் 32 டிகிரி வெப்பநிலையில் உறையும். 212 டிகிரி வெப்பநிலையில் கொதிக்கும். அமெரிக்காவில் ஃபாரன்ஹீட் அளவுகள் தான் அதிகமாக உபயோகப்படுத்தப்படும். அமெரிக்கா தவிர உலகின் பெரும்பாலான மற்ற நாடுகளில் செல்ஸியஸ் அளவுகள்தான் அதிகமாக வழக்கத்துக்கு வந்துவிட்டன.

தெர்மாமீட்டரில் வெப்ப அளவு பார்க்க நிறைய பேருக்குத் தெரிவதில்லை. நமது உடலின் வெப்பநிலை செல்ஸியஸ் அளவுகோலில் சொன்னால் 37 டிகிரி. ஃபாரன்ஹீட் அளவுகோலில் சொன்னால் 98.6 டிகிரி. அவ்வளவுதான். அதிக குழப்பமே தேவையில்லை.

பாலூட்டி விலங்குகள் அனைத்தும் (மனிதர்கள் உட்பட) வெப்ப ரத்த விலங்குகள் பிரிவைச் சேர்ந்தவை. அதாவது வெளியுலகில் எந்த அளவு வெப்பம் இருந்தாலும் சரி வெளி உலக வெப்பத்தைப் பற்றி கவலைப்படாமல் தனது உடல் வெப்பத்தை சீராக ஒரே அளவில் ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்ளும் சக்தி பாலூட்டி விலங்குகள் அதாவது வெப்ப ரத்த விலங்குகளுக்கு உண்டு.

உலகிலேயே மிக அதிகமான வெப்பமுள்ள நாடுகள் வரிசையில் மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள பர்கினா ஃபேúஸா, மாலி, செனகல் பெனின், தெற்கு ஆசியாவிலுள்ள மாலத்தீவு ஆஸ்திரேலியாவிலுள்ள கிரிபாட்டி ஆப்ரிக்காவிலுள்ள மொரிடானியா ஹவாய் அமெரிக்காவிலுள்ள பாலவ் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் கூட மனிதர்களும் விலங்குகளும் வாழத்தான் செய்கின்றன. ஆனால் அங்குள்ள வெளி வெப்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தனது உடல் வெப்ப நிலையை தானே பாதுகாத்து சீராக வைத்துக் கொள்கின்றன. இயற்கையின் வரப்பிரசாதம் இது.

வெளியுலகில் எந்த அளவு வெப்பம் இருக்கிறதோ அதே அளவு வெப்பத்தை தனது உடலிலும் வைத்திருக்கும் சக்தி படைத்த விலங்குகளை குளிர் ரத்த விலங்குகள் என்று அழைப்பதுண்டு. மண்புழு , ஆமை, பாம்பு, பல்லி, முதலை, பூச்சிகள், வண்டுகள், மீன் இனங்கள் போன்றவை குளிர் ரத்த விலங்குகள். அநேக குளிர் ரத்த விலங்குகளுக்கு உடலில் ரத்தம் இருக்காது. குளிர் ரத்த விலங்குகளுக்கு, தான் இருக்குமிடத்தைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்தே உணவு கிடைக்கின்றது. எலி ஒரு விநோதமான விலங்கு. எலி, ஒரு பாலூட்டி விலங்கு இனத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அது குளிர் ரத்த விலங்குகள் பிரிவிலேதான் இருக்கின்றது. நம் வீட்டில் நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கும் பல்லி ஒரு குளிர் ரத்த விலங்குதான். நடுக்காட்டில் புதிதாக ஒரு வீடு கட்டினால் கூட, அங்கேயும் பல்லி வந்துவிடும். மலை உச்சிக்கும் வந்துவிடும். பாலைவனத்துக்கும் வந்துவிடும்.

மனிதன் வெப்ப ரத்த விலங்குகள் பிரிவில் வருகிறான்.

மனிதனுடைய உடல் வெப்ப நிலை 37 டிகிரி செல்ஸியஸ் அல்லது 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியே இருக்கும். சில சமயங்களில் ஒரு டிகிரி குறைவாக அல்லது கூடுதலாக இருப்பதுண்டு. மனிதன் மட்டும் குளிர் ரத்த விலங்குகள் பிரிவில் சேர்ந்திருந்தால் நம்முடைய செயல்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். வெளியே என்ன வெப்பம் இருக்கிறதோ அதை நம்பியே நாம் வாழவேண்டும். ஒரு சுதந்திரம் இருக்காது.

மனிதனுடைய உடல் வெப்ப அளவை ஒரே சீராக எப்பொழுதும் வைத்துக்கொள்ள உதவுவது மூளையிலுள்ள "ஹைப்போதெலாமஸ்' என்கிற மூளை அடித்தளச் சுரப்பிதான். இந்த சுரப்பிதான் ஹார்மோன்களை வெளியிடச் செய்து உடல் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருக்க உதவுகிறது. உடலின் வெப்ப நிலை ரொம்ப அதிகம் ஆனாலும் சரி ரொம்ப குறைந்தாலும் சரி இந்த ஹைப்போதெலாமஸ் சுரப்பி தானாகவே இயங்க ஆரம்பித்து தோல், தசைகள், உறுப்புகள், சுரப்பிகள் முதலியவற்றிற்கு சிக்னல்களை அனுப்புகிறது. காய்ச்சல் அதிகமாக இருக்கிறதென்றால், உடல் வெப்பம் அதிகமாகி விட்டது என்று அர்த்தம்.

உதாரணத்திற்கு வெளியே வெப்பம் அதிகமாக இருப்பதாக நினைத்துக் கொள்வோம்.

அல்லது ஒருவர் கடினமான உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில், உடலில் இயற்கையாகவே சூடு ஏறும். உடனே இதைக் குறைக்க, மூளையின் அடித்தளத்திலுள்ள ஹைப்போதெலாமஸ் சுரப்பி நமது உடல் தோலிலுள்ள அனைத்து செல்களையும் தூண்டிவிட்டு வியர்வையை அதிக அளவில் வெளிவரச் செய்கிறது. உடனே உடலில் சேர்ந்த அதிக வெப்பம் வியர்வை வழியாக வெளியேறிவிடுகிறது.

இதேபோல வெளியே அதிகமாக குளிர் இருப்பதாக நினைத்துக் கொள்வோம். அப்போது உடலிலுள்ள சிறிய மற்றும் பெரிய தசைகளில் நடுக்கம் ஏற்பட்டு தசைகள் சுருங்க ஆரம்பித்து உடலில் வெப்பத்தை இயற்கையாகவே ஏற்றிவிடும். இதே நேரம் உடலின் மேலுள்ள முடிகளின் மயிர்க்கால்கள் உடல் வெப்பத்தை வெளியே விடாமல் பார்த்துக்கொள்ளும்.

எல்லாவற்றையும் எல்லா சூழ்நிலையையும் தாங்கக்கூடிய சக்தி மனிதனுக்கு இருந்தாலும் அதற்கும் ஓர் அளவு இருக்கிறது. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் அளவாகும். உள் உடல் வெப்ப அளவு 95 டிகிரி அல்லது அதற்கு கீழே குறைய ஆரம்பித்தாலே குளிருதல்,

உதறுதல், நடுங்குதல், தோல் வெளுத்துப்போதல் போன்ற "தாழ் வெப்ப நிலை' (ஹைப்போதெர்மியா) பாதிப்புகள் உண்டாக ஆரம்பித்துவிடும். இது உடலின் முக்கிய உறுப்புகளாகிய மூளை இருதயம் போன்றவைகளின் இயற்கையான செயல்களுக்கு முட்டுக்கட்டை போட ஆரம்பிக்கும். உங்கள் உடல் 91 டிகிரி வெப்ப அளவை சந்திக்க நேர்ந்தால் அது மறதியை உண்டாக்க ஆரம்பித்துவிடும்.

உங்கள் உடல் 82 டிகிரியை சந்திக்க நேர்ந்தால் அது நினைவை இழக்கச் செய்ய ஆரம்பிக்கும். உங்கள் உடல் 75 டிகிரிக்கும் கீழே போனாலே, உயிரோடு இருப்பது என்பது கடினமே. இதே மாதிரி உடலின் வெப்ப நிலை 105 டிகிரிக்கு மேலே போனால் அவசர மருத்துவ உதவி அவசியம் தேவை. 108 டிகிரிக்கு மேலே போனால் உயிர் பிழைப்பது கடினம். 108 டிகிரிக்கு மேல் வெப்பத்தை மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாது. உடலிலுள்ள புரதங்களெல்லாம் துண்டு துண்டாக சிதைந்து மூளை பாதிக்கப்பட்டு ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்குக் கொண்டு போய் விட்டுவிடும். அதேமாதிரி 39.2 டிகிரி குளிர்ந்த நீரில் ஒருவன் தொடர்ந்து சுமார் அரைமணி நேரம்தான் இருக்க முடியும். அதற்குமேல் இருந்தால் உயிருக்கு ஆபத்துதான். அதே மாதிரி தீப்பிடித்து எரிகின்ற ஒரு வீட்டில் சுமார் 230 டிகிரி வெப்பம் இருப்பதாக நினைத்துக் கொள்வோம். இதில் சுமார் 3லிருந்து 5 நிமிடங்கள் தான் வெப்பத்தை தாங்கிக் கொண்டு இருக்க முடியும். அதற்குமேல் இருக்க முடியாது.

உடலின் வெப்பத்தை ஏகநிலையில் ஒரே சீராக வைத்துக் கொள்ள ரத்தத்தின் பங்கு மிகமிக முக்கியம். ரத்தம் வெப்பத்தை உள்வாங்கி உடலின் எல்லாப் பாகத்துக்கும் சமமாக அனுப்பிவைக்கிறது. வெளியில் ஏற்படும் செயல்களுக்கேற்ப உடலிலுள்ள மொத்த ரத்தக்குழாய்களும் சுருங்குவதும் விரிவதும் எப்பொழுதும் நடந்து கொண்டேதான் இருக்கும்.

தோலின் மேலே கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய முடி அளவே இருக்கக்கூடிய நுண்ணிய ரத்தக்குழாய்கள் குறுகி சுருங்கி அதன் வழியாகச் செல்லும் ரத்தத்தை ரத்த அளவைக் குறைத்து உடலின் வெப்பத்தை பாதுகாக்கிறது.

தோலின் மேலிருக்கும் முடிகள் கூட உடல் வெப்பத்தை சீராக வைக்க உதவி செய்கிறது. இதுபோக தைராய்டு சுரப்பியிலிருந்து வெளியாகும் ஹார்மோன் கூட உங்களது உடல் வெப்ப நிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது. தைராய்டு ஹார்மோன் அதிக அளவில் ரத்தத்தில் இருந்தால் உடலின் வெப்பநிலை கூடிவிடும். ரத்த அளவும் ரத்த ஓட்டமும் தோலில் குறைந்தால் கை கால் விரல்களிலுள்ள தோலிலும் குறைந்தால்- உடலின் மற்ற இடங்களைவிட கை கால்கள் மிகவும் ஜில்லென்று ஆகிவிடும். ரத்த ஓட்டம் போதுமான அளவு இல்லையென்றாலே வெப்ப அளவு மாறிக் கொண்டே இருக்கும்.

உடல் வெப்பம் சீராக வைக்கும் விஷயத்தை மிகவும் லேசான விஷயமாக நினைத்து அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். உடல் வெப்பம் சீராக இல்லையென்றால் மூளை, இருதயம், நுரையீரல், சிறுநீரகம் கல்லீரல், உணவுமண்டலம் போன்றவை பாதிக்கப்படும்.

வெளி உலகில் இருக்கும் வெப்ப நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், தனது உடலின் வெப்ப நிலையை மட்டும் எப்பொழுதும் கட்டுப்பாடுடன், சீராக ஒரே மாதிரி வைத்துக் கொள்ள பாலூட்டி விலங்குகள் அதாவது வெப்ப ரத்த விலங்குகளால் முடியும். இது இயற்கையாகவே உடலில் அமைந்திருக்கிறது.

தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com