பழைமையான கிணறு

3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபனேரியில் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழைமையானது.
பழைமையான கிணறு

3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபனேரியில் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழைமையானது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி என்ற கிராமத்தில் இந்த கிணறு உள்ளது.

13 அடுக்குகளாக 3500 படிகளைக் கொண்டது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றில் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு. கி.பி.850-இல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அபநகரி. ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி என்றால் கிணற்றை குறிக்கும்) இந்தக் கிணறு ஹர்சத்மாதா கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அழகு மிளிரும் கிணற்றைப் பார்க்கும் போது இந்தியர்களின் கட்டடக்கலைத்திறனையும் காகிதப் புலமையையும் எண்ணி எண்ணி பெருமிதம் தோன்றுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி ஆகையால் மழைநீரைப் சேமிப்பதற்கு இப்படிப கிணறுகள் வெட்டுவது வழக்கமாக இருந்துள்ளது. ஜோத்பூர் அருகில் கடன்வால் என்னும் இடத்தில் இது போல் மற்றொரு கிணறு உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com