பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா?
By -ஜி.இந்திரா, ஸ்ரீரங்கம் | Published On : 17th October 2021 06:00 AM | Last Updated : 17th October 2021 06:00 AM | அ+அ அ- |

நோய் வரும் வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்.
பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல, ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போன்றது.
பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா? செலவு செய்யுங்கள். உங்களின் மதிப்பு தெரிய வேண்டுமா? கடன் கேளுங்கள்.
பிச்சை போடுவது கூட சுயநலமே, புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்.
அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க முடியாது.
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது மரம். வெட்டுங்கள் மழை நீரை சேமிப்பேன் என்கிறது குளம்.
நேர்மையான சம்பாத்தியம் பெரும்பாலும் கோயில் உண்டியலுக்கு வருவதில்லை.
பகலில் தூக்கம் வந்தால் உடம்பு பலவீனமாக இருப்பதாக அர்த்தம். இரவில் தூக்கம் வரவில்லை என்றால் மனசு பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.
துரோகிகளிடம் கோபம் இருக்காது. கோபப்படுபவர்களிடம் துரோகம் நிச்சயம் இருக்காது.