நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

நண்பர்களை மூன்று வகையாக பிரிக்கிறது ஒரு பழம் பாடல். பனை, தென்னை, வாழை என்பதே அவைகள். பனைமரம் யாராலும் நட்டு வைக்கப்பட்டதல்ல.
நண்பர்களை தேர்ந்தெடுப்பது எப்படி?


நண்பர்களை மூன்று வகையாக பிரிக்கிறது ஒரு பழம் பாடல். பனை, தென்னை, வாழை என்பதே அவைகள். பனைமரம் யாராலும் நட்டு வைக்கப்பட்டதல்ல. அது தானாகவே மூளைக்கிறது. தனக்கு கிடைத்த நீரைக் குடித்து தானாகவே வளர்கிறது. தனது உடலையும், ஒலையையும், நுங்கையும், பதனீரையும் உலகிற்கு வழங்குகிறது. நம்மிடம் எந்த உதவியை எதிர்பாராமல் நமக்கு உதவுகிறவன் பனைமரம் போன்ற நண்பன். 

தென்னை மரமோ நாம் அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால் தான் அது நமக்கு பலன் தருகிறது. அது போல் அடிக்கடி நம்மிடம் உதவி பெற்றுக்கொண்டு நண்பனாக இருக்கிறவன் தென்னை மரத்துக்கு இணையான நண்பன். 

வாழை மரமோ அனுதினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் அது வளர்ந்து நமக்குப் பலன் தருகிறது. அது போல தினமும் உதவி பெற்றுக் கொள்கிறவன், வாழைமரம் போன்ற நண்பன். இந்த மூவரில் பனைமரம் போன்ற நண்பனையே நீ தேர்தெடுத்துக் கொள்ள வேண்டிய நண்பன்!

("கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்' நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com