ஞாபக சக்தி அதிகரிக்க...

தோப்புக்கரணம் போடும்போது காதில் உள்ள முக்கியப்புள்ளிகளை கைவிரல்களால் இழுத்துப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். அப்போது ஒரு அழுத்தம் உண்டாகும்.
ஞாபக சக்தி அதிகரிக்க...

தோப்புக்கரணம் போடும்போது காதில் உள்ள முக்கியப்புள்ளிகளை கைவிரல்களால் இழுத்துப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். அப்போது ஒரு அழுத்தம் உண்டாகும். அதாவது, வலது கை இடது காதின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் இறுக்கமாக அழுத்திப் பிடித்தபடி கீழே உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். அப்படி கீழே உட்காரும்போது மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவேண்டும், எழுந்திருக்கும்போது மூச்சை மெதுவாக வெளியே விடவேண்டும். கீழே உட்காரும்போது 10 நொடி உட்கார்ந்து எழுந்திருக்கவேண்டும். காலையில் குளிப்பதற்கு முன்பும், மாலையில் குளிப்பதற்கு முன்பும் தோப்புக்கரணம் போடுவது நல்லது.

பொதுவாக முதல் தடவை தோப்புக்கரணம் போடுபவர்கள் ஐந்துதடவை மட்டுமே செய்து பழகவேண்டும். ஆர்வமிகுதியால் முதல்நாளே அதிகமாக செய்தால் கால் தொடைப்பகுதியிலும் கால் மூட்டுக்குக் கீழே உள்ள சதைப்பகுதியிலும் பிடிப்பு உண்டாகி வலி எடுக்கும். அதனால் தோப்புக்கரணம் போடுவதை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொள்ள வேண்டும். முதலில் சில நாள்கள் ஐந்து தோப்புக்கரணமும் இரண்டு, மூன்று நாள்கள் கழித்து 10, 15 என்றும் கூட்டிக்கொள்ளலாம். ஓரளவு பழகிவிட்டால் தினமும் 15-இல் இருந்து 50 தோப்புக்கரணம் வரை போடலாம்.

தோப்புக்கரணம் போடும்போது தொடர்ந்து உட்கார்ந்து எழுந்திருப்பதால் காதின் நுனிப்பகுதியில் ஏற்படக்கூடிய அழுத்தம் நரம்புகளின் வழியாக மூளை வரை செல்லும். 

அப்போது மூளையில் ஏற்படும் மாற்றத்தால் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தூண்டும். அத்துடன் மந்தநிலையில் உள்ள மற்ற உடல் உறுப்புகளும் உற்சாகமாகிவிடும். இதை 5,000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

ஆட்டிசம் குறைபாடு, மன இறுக்க நோய்களுக்கும்கூட தோப்புக்கரணம் நல்ல தீர்வு தருவதாக அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்படும். 

மந்தபுத்தியாக உள்ள மாணவர்களின் மூளை நன்றாகச் செயல்படும். ஞாபக சக்தி அதிகரித்து அறிவுக்கூர்மை கூடும். இந்த உண்மை தெரிந்ததால்தான் முற்காலத்தில் மந்தமான மாணவர்களை நல்ல அறிவாற்றல் உள்ள மாணவர்களாக மாற்ற தோப்புக்கரணம் போட வைத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com