நடக்கும் குற்றம்

ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின்  வி.விஜயகுமார் தயாரித்து வரும் படம்  "தி ஜர்னி ஆஃப் பெட்'   ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
நடக்கும் குற்றம்


ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் வி.விஜயகுமார் தயாரித்து வரும் படம் "தி ஜர்னி ஆஃப் பெட்' ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவிபிரியா, திவ்யா உள்ளிட்டோர் பலர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். "வெத்துவேட்டு' படத்தை இயக்கிய எஸ்.மணிபாரதி கதை எழுதி இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ...

சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு. காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதை தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன. ஊட்டியில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளோம்'' என்றார் இயக்குநர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com