முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
உணர்வுகளை கொண்டு வரும் நிகழ்வு
By DIN | Published On : 26th September 2021 05:09 PM | Last Updated : 26th September 2021 05:09 PM | அ+அ அ- |

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் தயாரித்து வரும் படம் "பேய காணோம்' . மீரா மிதுன், தருண் கோபி, கெளசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜேக்கப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை செல்வ அன்பரசன் இயக்குகிறார். ""இதில் அவசியம் எதிர்பார்க்கிற பயங்கர காட்சிகள் எதுவும் இருக்காது. இப்ப பேய் வரப்போகுகிறதென நினைக்கிறபோது பேய் வராது. எப்போதும் இதுமாதிரி படங்களில் தவிர்க்க முடியாமல், சில காட்சிகள் வரும். திடீரென்று புறாக்கள் றெக்கைகளை அடித்துப் பறக்கும். திடீர் என்று ஒரு பெண் எழுந்து வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பார். கழுத்தில் ஒரு கை விழும். பதறியடித்து வியர்த்துப் போய் நாம் பார்த்தால் அவள் கணவர் "ஏன் தூக்கம் வரலையா?' எனக் கேட்டுட்டு அரவணைப்பார்.அப்படியெல்லாம் உங்களை பயமுறுத்தமாட்டோம். ஒரு கதைக்காக சில ஆரம்பப் புள்ளிகள் கிடைக்கும். அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். வெறும் த்ரில்லர் படமாக இல்லாமல் இதில் பலதரப்பட்ட உணர்வுகளையும் கொண்டு வந்து காட்ட முடிந்தது. வித்தியாசமாக இருக்கும்'' என்றார் செல்வ அன்பரசன்.