மின்சாரம் தடை

காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒரு முறை மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. ஊழியர்கள் வந்து 
மின்சாரம் தடை


காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒரு முறை மதுரைக்கு சென்றிருந்தார். அங்கு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. ஊழியர்கள் வந்து பார்த்துக்கொண்டிருந்தனர்

அதிக நேரம் காத்திருந்த காமராஜர் "கட்டிலை மரத்தடியில் போடு' என்றார். உடனே அருகில் இருந்த ஒரு கட்டிலை வேப்பமரத்தடியில் கொண்டு வந்தனர். அதில் காமராஜர் படுத்த போது பாதுகாப்பிற்காக அங்கே ஒரு போலீஸ்காரர் காவலுக்கு நின்றார். "நீ ஏன் இங்கே நிற்கிறாய் என்னை யாரும் தூக்கிக் கொண்டு போய் விடமாட்டார்கள்.  நீயும் போய் படு'  என்று அந்த போலீஸ்காரரை அனுப்பி வைத்த காமராஜர் சில நொடிகளில் ஆழ்ந்த நித்திரையை தொடங்கிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com