சூடான் நாட்டில்  இட்லி - சாம்பார்!

இந்தியா  தனது  75-ஆவது சுதந்திர  நாள் கொண்டாட்டத்தைக்  கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
சூடான் நாட்டில்  இட்லி - சாம்பார்!


இந்தியா தனது 75-ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில், இந்தியர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் 75-ஆவது சுதந்திர நாள்கொண்டாடுகிறார்கள் என்று சொல்ல முடியாது. வெளிநாடுகளில் செயல்படும் இந்தியத் தூதரகம் முன்னின்று நடத்தினால் அங்குள்ள இந்தியர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடுவார்கள்.

சூடானில் சுமார் 600 இந்தியர்கள் வாழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லை.

அப்படிப்பட்ட சூழலில் சூடான் இந்தியர்களின் சங்கமத்தையும், 75-ஆவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தையும் ஒரு சேர நடத்த சூடான் இந்திய தூதுரகம் தீர்மானித்தது. நடத்தியும் காட்டியது.

இந்தியர்கள் இந்தியத் துணிவகைகளை காட்சிப்படுத்தினர். கலைநிகழ்ச்சி களுடன், இந்திய உணவு வகைகளையும், உள்ளூர் சூடானியர்களுக்கும், பல மாநிலங்களை சேர்ந்த இந்திய மக்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது.

கொண்டாட்டத்தின் குறிப்பிட வேண்டிய விஷயம் கலந்து கொண்டவர்களுக்கு இட்லி சாம்பார் இலவசமாக வழங்கியதுதான்!

சூடானில் இட்லி சாம்பாருக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் விரைவில் உணவு விடுதி துவங்கப்படலாம்...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com