ரோந்து பணியில்  ரோபோ நாய்!

கரோனா  தாக்கத்திலிருந்து இந்தியா மீண்டு   வந்தாலும்,  அங்கே சீனாவில் ஷாங்காய் நகரில்  கரோனா  பாதிப்பு அதிகம் என்பதால்
ரோந்து பணியில்  ரோபோ நாய்!

கரோனா  தாக்கத்திலிருந்து இந்தியா மீண்டு   வந்தாலும்,  அங்கே சீனாவில் ஷாங்காய் நகரில்  கரோனா  பாதிப்பு அதிகம் என்பதால் முழு ஊரடங்கு  நடைமுறையில் இருக்கிறது.  அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்  அங்கேயே  தங்கிக் கொள்ள வேண்டும்  என்கிற அளவுக்கு கடுமையான கட்டுப்பாடு.  பொதுமக்கள்  வீட்டுக்குள்  இருக்க வேண்டும். வெளியே வராகி கூடாது என்று ஆணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

காவலர்களும் வெளியே வந்தால் கரோனா தொற்றிற்கு  ஆளாக  வேண்டும் என்பதால்  சாலைகளில்  பொதுமக்கள் உலாவுகிறார்களா என்பதைக் கண்காணிக்க ரோபோ  நாயை  சாலைகளில்   ரோந்து  போகப் பயன்படுத்துகிறார்கள். 

ரோபோ  நாயின்  தலைக்கு மேல் இருக்கும்  ஒலிபெருக்கி மூலம், கரோனா விதிமுறைகளையும், முகக்கவசம் அணியச் சொல்லியும்,  கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவச் சொல்லியும்,  உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும் என்றும்   கேட்டுக் கொள்கிறது. இந்த  ரோபோ நாய்  வலைதளங்களில்  வைரலாகி  வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com