21 ஆண்டுகளுக்குப் பிறகு....

பிஜிஎஸ் சரவணகுமார் தயாரிப்பில்  சிவ மாதவ் கதை எழுதி இயக்கி வரும் படம்  "3.6.9'.  21  வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்கிறார்  பாக்யராஜ்.
21 ஆண்டுகளுக்குப் பிறகு....


பிஜிஎஸ் சரவணகுமார் தயாரிப்பில் சிவ மாதவ் கதை எழுதி இயக்கி வரும் படம் "3.6.9'. 21 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்கிறார் பாக்யராஜ். உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம். இதில் பாக்யராஜ் பேசியதாவது.... "" கதையின் நாயகனாக நான் நடித்து 21 வருடங்கள் ஆகி விட்டதாக எல்லோரும் பேசுகிறார்கள். அது ஒரு விதத்தில் எனக்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. திரையில் வருகிறவன்தான் ஹீரோவா... கதை, திரைக்கதை எல்லாம் சும்மாவா.... கதை இருந்தால்தான் ஒருவன் ஹீரோவாக மாற முடியும்.

திரைக்கதை அதை விட முக்கியம். நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன். நான் எப்போதும் ஹீரோதான். நான் இதுவரை கிறிஸ்தவராக நடித்ததில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக்ஷன் என்றார்கள். இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. 81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தார்கள். யாராவது சொதாப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது .ஆனால் இவர்கள் 1 மாதம் வரை பயிற்சி எடுத்து வந்திருந்தார்கள். அது பிரமிப்பாக இருந்தது. மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். அனைவரின் ஒத்துழைப்பில் இந்தப் படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது'' என்றார் பாக்யராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com