மீண்டும் பாகவதர்!

கந்தர்வகான ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை நாடகமாக்கப் போகிறார் கலைமாமணி டி.கே.எஸ்.புகழேந்தி. உலக நாடகத் தினத்தைக் கொண்டாடவே இந்த ஏற்பாடு. நாடக ஆக்கம் டி.வேலுச்சாமி. 
மீண்டும் பாகவதர்!


கந்தர்வகான ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை நாடகமாக்கப் போகிறார் கலைமாமணி டி.கே.எஸ்.புகழேந்தி. உலக நாடகத் தினத்தைக் கொண்டாடவே இந்த ஏற்பாடு. நாடக ஆக்கம் டி.வேலுச்சாமி. 

புகழேந்தி 2019-இல் சிறந்த நாடக நடிகருக்கான கலைமாமணிப் பட்டம் வென்றவர். ஆறு வயதிலேயே நாடக மேடைக்கு வந்தவர். தந்தை டி.கே.சண்முகம்  அவ்வையாராக நடித்த நாடகத்தில் சிறுவனாகச் சில காட்சிகள் தோன்றும் ஒரு சின்ன வேடம். பிரமாதமாக நடித்துப் பெயர் வாங்கினார் புகழேந்தி. "தேச பக்த சிதம்பரனார்' நாடகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் ஆறுமுகமாக ஒரு நல்ல வேடம். 

பாடி நடிக்கும் வல்லமை பெற்ற  டி.கே.எஸ். தக்கேசி என்பவரிடம் கர்நாடகச் சங்கீதம் பயின்றார். ஹார்மோனியம் வாசிக்கவும் கற்றுக் கொண்டார். இசை அமைக்கும் திறனைப் பெற்றவர். சென்னை அகில இந்திய வானொலி நிலையம் தேர்வு செய்த இசை அமைப்பாளர். நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி. விவசாயம் பட்டம் பெற்றவர். அரசுப் பணியிலும் இருந்திருக்கிறார். தந்தை டி.கே.சண்முகத்துக்கும் சித்தப்பா டி.கே. பகவதிக்கும் புகழ் தந்த நாடகம் "ராஜ ராஜ சோழன்' பல ஆண்டு
களுக்குப் பின்னர் இந்த நாடகம் அமெரிக்க மண்ணில் அரங்கேற்றப்பட்டபோது, மன்னன் விக்கிரமாதித்தன் என்ற வேடத்தைச் சிறப்பாகச் செய்து பாராட்டு பெற்றார்.

"சிவாஜி கண்ட இந்து சம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தைச் சிறப்பாகத் தயாரித்து அளித்தார் புகழேந்தி. அண்ணா நடித்த அதே காகபட்டர் வேடத்தில் புகழேந்தி நடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com