குமரன் குன்றை மீட்டுக் கொடுத்தவர்!

விடுதலைப் போரில் சிறை சென்றவர் என்ற சிறப்பு ம.பொ.சி.க்கு உண்டு. முதலில் காங்கிரஸில் இருந்து, பிறகு கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறிய தலைவர்களில் இவரும் ஒருவர். 
குமரன் குன்றை மீட்டுக் கொடுத்தவர்!

விடுதலைப் போரில் சிறை சென்றவர் என்ற சிறப்பு ம.பொ.சி.க்கு உண்டு. முதலில் காங்கிரஸில் இருந்து, பிறகு கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
"தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமை வேண்டும்'' என்று தமிழரசுக் கழகம் என்ற தனி இயக்கம் கண்டார். ஆனாலும், காந்தியையும் கதரையும் கைவிடவில்லை.
காங்கிரஸ் நூற்றாண்டு விழாவில், அவருக்கு பிரதமர் ராஜீவ் காந்தி கேடயம் அளித்து சிறப்பித்தார்.
அச்சுக் கோர்ப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர் ம.பொ.சி. பின்னர், டி.என்.நடராஜனின் "விநோதினி' மாத இதழிலும், வரதராஜுலுவின் "தமிழ்நாடு' நாளிதழிலும் அச்சுக் கோர்ப்பாளராக இருந்தார். தானே தமிழ்ப் படித்து எழுத்தாளரானார்.
1936-37-இல் "கிராமணி குலம்' என்ற இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்தார் (ஆசிரியர் த.சே.உமாபதி).
1946 முதல் 1951 வரை "தமிழ் முரசு' என்ற இதழையும் ( மாதம் இரு முறை, மாதம், வாரம்), 1954-55-இல் "தமிழன் குரல்' என்ற மாத இதழையும் நடத்தினார். 1950-இல் இருந்து "செங்கோல்' என்ற வார இதழை வெளியிட்டார்.
தமிழன், தேசியவாதி, பாமரன், மயிலை பொன்னுசிவம், ஞானம், வண்டு, முதலிய பெயர்களில் ம.பொ.சி. எழுதினார். சிலப்பதிகாரத்தை எளிய இனிய தமிழில் எல்லா மக்களுக்கும் வழங்கியதால் "சிலம்புச் செல்வர்' என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் அளித்து சிறப்புச் செய்தது. இவர் எழுதிய தலையங்கங்கள் தொகுக்கப்பட்டு, "ம.பொ.சி.யின் தலையங்க இலக்கியம்' என்று தனி நூலாக வெளிவந்தது. தனது கடைசி காலம் வரை "செங்கோல்' நடத்தினார். கப்பலோட்டிய தமிழனையும், கட்டபொம்மனையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ம.பொ.சி.யே.
காங்கிரஸ் வரலாற்றை எழுதிய பட்டாபி சீதாராமையா, அதில் தமிழ்நாட்டின் பங்கை மறைத்தபோது அந்தப் பங்கை அனுபவப் பூர்வமாக எழுதிய உலகறிய செய்தவரும் இவரே!
வரலாற்றுக் காலம்தொட்டு தமிழ்நாட்டின் வட எல்லையாகப் போருக்குப் பின்னர், திருத்தணியையும் பறிகொடுத்த நேரத்தில் எல்லைப் பாதுகாப்புப் போராட்டம் நடத்தி, குமரன் குன்றை மீட்டுக் கொடுத்தவரும் இவரே!
- முக்கிமலை நஞ்சன்




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com