கலைநயமிக்க யக்ஷகானம்

கர்நாடகத்தின் மங்களூரை அடுத்த கடற்கரைப் பகுதிகளில் யக்ஷகானம் மிகவும் பிரபலம். 
கலைநயமிக்க யக்ஷகானம்

கர்நாடகத்தின் மங்களூரை அடுத்த கடற்கரைப் பகுதிகளில் யக்ஷகானம் மிகவும் பிரபலம்.

இந்த ஆடல் பாடல் நாடகக் கலையை அரசுப் பள்ளியில் மாணவர்கள் கற்க இயலவில்லை. இதற்கு ரூ.500 மாதக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். மங்களூரைச் சேர்ந்த சகோதரர்கள் விஸ்வநாத், திவாகர் பத்முஞ்சா ஆகிய இருவரும் இந்தக் கலையை இலவசமாகவே கற்றுத் தந்து வருகின்றனர். இதோடு, சுற்றுச்சூழல் மேம்பாடு அடைய இலவசமாக மரக்கன்றுகளை அளித்து, வளர்க்க வைத்தும் வருகின்றனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் இரவு வரை மூன்று தனித்தனி வகுப்புகளை நடத்தி, பயிற்சி அளித்து வருகின்றனர். இதுவரை 40 பேரின் அரங்கேற்றமும் செய்துள்ளனர். இதுகுறித்து அவர்களைக் கேட்டபோது, கூறியதாவது:

ஐநூறு ஆண்டுக் கலையை அழியாமல் பாதுகாக்க இலவசப் பயிற்சியை அளிக்கிறோம்.

நாடகம், நடனம், இசை, உரையாடல், ஆடை, அலங்காரம்- இவை அனைத்தையும் கொண்ட கலை இது. மாலை 6 மணிக்குத் தொடங்கி, மறுநாள் விடியற்காலையில் நிகழ்ச்சி நிறைவடையும். மந்தார்தி துர்கா பரமேஸ்வரி கோயிலில் அடுத்த 20ஆண்டுகளுக்கு இந்த நிகழ்ச்சி நடக்க, ஒப்பந்தமாகிவிட்டது என்றால் கலையின் அருமையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வழக்கமாக, நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை இந்தக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மாநிலத்தில் 940 நிகழ்ச்சிகள் நடைபெறும். இவற்றில் 160 இடங்களில் நிரந்தரமாக நடைபெறும். மற்றவை பல்வேறு இடங்களில் சென்று நடத்தப்படும்.

கட்டில் துர்கா பரமேஸ்வரி கோயிலிலும் யக்ஷகான வேண்டுதல் உண்டு.

மதங்கள் சார்ந்த இருப்பிடங்கள் அளித்த சிக்கலால், கர்நாடகத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அரசு தடைவிதித்துவிட்டது. இதனால், யக்ஷ கான கலைக்கும் சிக்கல் வந்துவிட்டது. மாலை 6 மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி, இரவு 10 மணிக்குள் முடிக்கிறோம்.

கன்னடம், துளு, ஹிந்தி, ஆங்கிலம், கொங்கனி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளிலும் நடத்துகிறோம். கேரள மாநிலத்தில் இந்தக் கலை சற்று வித்தியாசமாக நடத்தப்படுகிறது'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com