திருக்குறள் சேவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் தமிழ் ஆசிரியர் ஹம்ச கோபால் முருகன். இவர் தான் வசிக்கும் பகுதியில் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.
திருக்குறள் சேவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் தமிழ் ஆசிரியர் ஹம்ச கோபால் முருகன். இவர் தான் வசிக்கும் பகுதியில் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். சாலையில் செல்வோர் பயன் பெறும் வகையில் அன்றாடம் கரும்பலகையில் திருக்குறளையும் அதன் பொருளையும் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அறிவுச்சோலை கல்வி மையத்தில் முதன்மை பணியாக திருக்குறளை பரப்புதல் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தை புதுமைகளை முன்னிட்டு பல செய்து வருகிறார். மாணவர்களின் வீடு தேடி சென்று திருக்குறள் புத்தகத்தை வழங்கி வருகிறார் 1330 குறளை எழுதி பழகும் மாணவர்களுக்கு விருது கேடயம் வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார். இது பற்றி அவரிடம் கேட்ட போது சொன்னார்:
""நான் ஆரம்ப கால கட்டத்தில் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றினேன். அதனால் படிப்பை மாணவர்களை இடையில் நிறுத்தக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். இதனால் கிராமத்து மாணவர்களின் மனநலம் பற்றி நன்கு அறிவேன். எனவே அவர்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருக்குறளை பரப்பு முயற்சியில் இறங்கியுள்ளேன்.
முதலில் எளிமையான வகையில் திருவள்ளுவர் நாளன்று படத்திறப்பாக மட்டும் கொண்டாடப்பட்டது. அதன்பிறகு இல்லந்தோறும் திருக்குறளை அச்சிட்ட துண்டறிக்கை கொடுத்து திருக்குறள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எல்லாக் குழந்தைகளின் கரங்களிலும் திருக்குறள் நூல் இருக்க வேண்டுமென முடிவு செய்து வீடு தேடிச் சென்று திருக்குறள் நூலை வழங்கினோம். அதற்கடுத்த ஆண்டு திருக்குறள் பென்சில் எல்லா மாணவர்களும் வழங்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தினத்தன்று திருக்குறளை முழுமையாக வாசித்து முடித்த ச.தி .செந்தில்குமாருக்கு திருக்குறள் ஆர்வலர் விருது அளித்து சிறப்பித்தோம். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு 1330 குறளையும் பார்த்து எழுதிக் கொடுக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் ஆர்வலர் விருது கொடுத்து சிறப்பித்தோம். திருக்குறள் மரம் ஒன்றை நிகழ்வன்று அமைத்தோம். அனைத்து மாணவர்களுக்கும் திருவள்ளுவர் படம் உள்ள சிறு நாட்காட்டி அட்டை வழங்கினோம்
சென்ற ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் அச்சிட்ட பென்சில் வழங்கப்பட்டது . விதைப் பந்து, மரநாற்று வழங்குதல் என விழா கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு சுவரொட்டி வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர்கள் மட்டுமல்லாமல் தேசிய நல்லாசியர் விருது பெற்ற ஆசிரியர் வெ.கீதா, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகர், உள்ளூர் பெண்கள் உட்பட பலரும் விருது பெறுகின்றனர். இந்த ஆண்டு விழா இல்லம் தேடிச் சென்று விருது வழங்கும் விழாவாக நடைபெறுகிறது.
எங்கள் பணிகளுக்கு உள்ளூர் ஊராட்சி மன்றம்,படிகள் அறக்கட்டளை பொள்ளாச்சி இலக்கியவட்டம், புன்னகை இலக்கிய அமைப்பு, கம்பன் கலை மன்றம், கொலுசு மாத இதழ் நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com