சந்திரனில் ஆக்ஸிஜன்

பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்திரனின் மேற்பரப்பு வறண்டதாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள்  நிலவின் மேற்பரப்பு நீர் மூலக்கூறுக்கான தடயங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளது
சந்திரனில் ஆக்ஸிஜன்


பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்திரனின் மேற்பரப்பு வறண்டதாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள்  நிலவின் மேற்பரப்பு நீர் மூலக்கூறுக்கான தடயங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளது புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதிகளில் கூட சந்திரன் மூலக்கூறு நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் ரசாயன ஆதாரம் கிடைத்துள்ளது. 

வான்வழி தொலைநோக்கி மூலம் ஆய்வகத்தின் தரவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் சந்திர மேற்பரப்பை முன்பு பயன்படுத்தியதை விட மிகவும் துல்லியமாக கண்காணித்து வந்தனர். 

மேலும் தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம், அது எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவும். சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருந்தால், அதை மனித ஆய்வுக்கான வளமாகப் பயன்படுத்தலாம். இது குடிநீர், சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜன் மற்றும் ராக்கெட் எரிபொருளாக பயன்படுத்தப்படலாம்  என்று விஞ்ஞானி ஹொன்னிபால் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com