நடமாடும் நூலகம்

கரோனா பொது முடக்கம் காரணமாக கல்வி கற்க முடியாத நிலையில் உள்ள கிராமப்புறத்தை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக, நடமாடும் மினி நூலகம் ஒன்றை சண்டிகரை சேர்ந்த ஒருவர் உருவாக்கியுள்ளார்.
நடமாடும் நூலகம்

கரோனா பொது முடக்கம் காரணமாக கல்வி கற்க முடியாத நிலையில் உள்ள கிராமப்புறத்தை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக, நடமாடும் மினி நூலகம் ஒன்றை சண்டிகரை சேர்ந்த ஒருவர் உருவாக்கியுள்ளார்.

நகர்ப்புற மாணவர்களை பொருத்தவரை அவர்களுக்கு செல்போன், தொழில்நுட்ப வசதிகள் கிடைத்துவிடுகிறது. ஆனால் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் வீடுகளில் செல்போன், தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், ஏன் பல மாணவர்களின் வீட்டில் எழுதுவதற்கு பேனாவும் இல்லை நோட் புக் கூட இல்லை. இந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி கல்வியை தொடருவார்கள். இதனால் அவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் உருவானது.

இதனை கருத்தில் கொண்டு, சண்டிகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு, வெற்றிப்பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தை நடத்தும் சந்தீப் குமார் பேசியதிலிருந்து....""கரோனா பாதிப்பால் பல மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. கிராமப்புறங்களை பொருத்தவரை பாதிப்பு சதவிகிதம் அதிகம் என்று சொல்லலாம். எனவே அவர்களின் எதிர்கால நலன் கருதி தன்னார்வலர்கள் பலரிடம் விஷயத்தை சொன்னேன். அவர்கள் எனக்கு புத்தகங்கள் தந்து உதவினார்கள்.

அதனால் இப்போது மினி வேனில் அனைத்து புத்தகங்களை அடுக்கும் படி மினி நூலகத்தை உருவாக்கினேன். இதில் அறிவியல், ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம் என அனைத்து தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் புத்தகங்களை படிக்க ஏற்பாடு செய்தேன். மாணவர்கள் ஏதேனும் புத்தகம் தேவை என்று கேட்டால் அதனை பெற்று தரவும் ஏற்பாடு செய்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 40 ஆயிரம் புத்தகங்களை பல பகுதிகளில் இருந்து சேகரித்தேன். இந்த பொது முடக்க காலத்தில் 10 ஆயிரம் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகித்துள்ளேன்'' என்கிறார் சந்தீப் குமார்.

தற்போது குடிசைப் பகுதிகளில் வசிக்கும் இயலாநிலை மாணவர்களை தேடிக் கண்டுபிடித்து புத்தகங்கள் வழங்கி வருவதுடன் மட்டுமல்லாமல் முகக்கவசம், நாப்கின் உள்ளிட்டவைகளையும் வழங்குகிறார். கரோனா காலத்தில் பின்பற்ற சுகாதார நடைமுறைகள் குறித்தும் தொடர்ந்து மாணவர்களிடம் எடுத்துரைத்து வருகிறார் சந்தீப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com