கருணையுள்ளவர்களின் உலகம்

கரோனா பரவலால் பார்வையற்றவர்கள் எங்குதான் செல்வார்கள். நோய்ப்பரவலை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்.
கருணையுள்ளவர்களின் உலகம்


கரோனா பரவலால் பார்வையற்றவர்கள் எங்குதான் செல்வார்கள். நோய்ப்பரவலை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். வருமானமற்ற நிலையில் எப்படியெல்லாம் பார்வையற்றவர்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பார்கள்.

இது தொடர்பாக சிகாகோவில் ஒரு வித்தியாசமான பாராட்டத்தக் மனிதநேய நிகழ்வு நடந்துள்ளது. கோகுல்நாத் சந்திரன் எனும் இசைக்கலைஞர், கண் பார்வை குறைபாடுள்ளவர்களால் நடத்தப்படும் கோமகனின், ராகப்பிரியா எனும் அமைப்பை கரோனா தொற்றுக்கு முன்பே தொடங்கினார். இதன்மூலம் வரும் வருவாயை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு பணமாக உதவிட வேண்டும் என்பது அவரது நோக்கம். 

ஆனால், கரோனா தொற்று வெகுவாக பரவவே அவரின் அனைத்து முயற்சிகளும் வீணாகிப்போனது. கரோனா தாக்குதலுக்கு முன்பு கோமகனின் ராகப்பிரியா இசை நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்தவர்கள் அனைவரும் செலுத்திய பணத்தை திருப்பி எடுத்துக்கொள்ளவே நிகழ்ச்சி ரத்தாயிற்று.

இந்நெருக்கடியில்தான் அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உதவிட முன்வந்தனர். சிகாகோவின் பிரம்மேஷ் பிரேமானந்த், வர்ஷா முரளி, ரித்திக் கணேசன், மற்றும் யஷ்வந்த் உதயபிரகாஷ் ஆகிய நான்கு மாணவர்களும் கோடை விடுமுறையை பயன்படுத்தி மாற்றுத் இணையதளத்தை கட்டமைத்தனர். 

இதற்காக அமெரிக்காவில் வாழும் 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு இசை கற்பிப்பதன் மூலம் 27 பார்வையற்றவர்கள் குடும்பத்துக்கு வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்கிறது. ஏற்கெனவே 2018-இல் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பண்பாட்டு கலைநிகழ்ச்சியில் இவ்விசைக்குழு கலந்து கொண்டிருந்ததால், இக்குழுவைப் பற்றி பலர் அறிந்திருந்தனர்.

உதவித்தொகையாக வந்த பணத்தை அப்படியே பணமாக கொடுத்தால் சிறிதுகாலமே உதவிடமுடியும். இக்குழுவிற்கு மாத வருமானம் ஏற்பாடு செய்தால்தான் சரியான தீர்வு என முடிவெடுத்து இணைய வழி இசைப் பள்ளிக்கான கட்டமைப்பை ஏற்பாடு செய்தனர். கணிப்பொறியும் நவீன தொலைபேசியும், ஹூம், கூகுள் மீட், போன்ற செயலிகளின் உதவி தேவைப்பட்டது. இசைப்பள்ளியில் 9 பேர் இசைக் கலைஞர்களாகப் பொறுப்பேற்றனர். இப்பள்ளியில் இருந்து வரும் வருமானம்18 பார்வையற்ற குடும்பத்தினருக்கு பயன்படும் வகையில் செயல்படுகிறது.

இசைப்பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆங்கிலம் முதன்மையாகவும் தமிழ் தெரிந்த மாணவர்களுக்குமிடையேயான ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவது, இவர்களுக்கு ஒரு சவாலாக இருந்தாலும், அதில் வெற்றியும் பெற்றனர். இசைப் பள்ளித் தொடங்கி 18 மாதங்கள் ஆன நிலையில் கோகுல்நாத் சந்திரன் ஒருவாரத்தில் 60 மணி நேரங்கள் செலவிட்டு 15 மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளித்தார். இதனால் பார்வையற்றவர்களின் 18 குடும்பங்களுக்கு பொருளாதார உதவி கிடைக்கிறது.

ஆனால், இதற்கு காரணமாக இருந்த கோகுல்நாத் சந்திரன் கரோனா பெரும்நோய்த்தொற்றால் இறந்துவிட்டது அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும்,  தொடர்ந்து தலையிட்டு குழுவை நிர்வகிக்க தேவையான அடுத்த உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட அவரையே பொறுப்பிற்கு இசைக்குழுவை தொடர்ந்து நடத்திட ஆவணம் செய்தார்கள். இது அவருக்காகத் தொடங்கப்பட்ட இசைப்பள்ளி. அவரே பொறுப்பேற்று நடத்துவதே முறை என்ற மனப்பாங்கோடு இந்த கருணை உள்ளங்கள் இணைந்து முடிவு செய்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com