முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
பிரபுதேவாவின் நடன இயக்கத்தில்....
By DIN | Published On : 08th May 2022 05:19 PM | Last Updated : 08th May 2022 05:19 PM | அ+அ அ- |

கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் "காட்பாதர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் இணைந்து திரையில் நடனமாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதால், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். இவர்களுக்கு சிறப்பான நடனத்தை உருவாக்க பிரபுதேவா நடன இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பாடலுக்கு எஸ். எஸ். தமன் இசை அமைக்கிறார்.
விரைவில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது இதுதொடர்பாக இசையமைப்பாளர் தமன் தன்னுடைய சுட்டுரையில் பதிவிட்டிருப்பதாவது..."" அரங்கமே அதிரும் வகையில் பிரபுதேவாவின் நாட்டிய வடிவமைப்பில், சிரஞ்சீவி, சல்மான்கான் இருவரும் இணைந்து நடனமாட இருக்கிறார்கள். திரையில் காணும்போது ரசிகர்களின் உற்சாகம் கரை புரளும்'' என பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் இயக்குநர் மோகன் ராஜா, நடன இயக்குநர் பிரபுதேவா, சிரஞ்சீவியுடன் தமன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். நயன்தாரா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் சத்யதேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.