ஒரு கதையில் நான்கு ஹீரோயின்கள்
By DIN | Published On : 22nd May 2022 05:17 PM | Last Updated : 22nd May 2022 05:17 PM | அ+அ அ- |

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் "கன்னித்தீவு'. சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர், இயக்குநர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் சஞ்சய் லால்வானி ஆகியோருடன் படக் குழுவினரும் பங்கேற்றனர்.
விழாவில் இயக்குநர் சுந்தர் பாலு பேசும்போது...
""1999 -ஆம் ஆண்டு இயக்குநர் தியாகராஜனிடம் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன். அப்போது அவர் ஒரு விஷயம் அவர் கூறினார். அது, சினிமாவில் தெரியும் என்று சொல்வதைவிட தெரியாது என்று கூறுவதில் தான் மரியாதை அதிகம் என்று கூறினார். அதை இத்தனை வருட என் சினிமா பயணத்தில் அனுபவமாக உயர்ந்திருக்கிறேன்.
என்னுடைய முதல் படம் கர்ஜனை. த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் இன்னும் வெளியாகவில்லை. முதலில் இயக்குநராகி விட்டு பின்பு தான் தயாரிப்பாளார் ஆனேன். கன்னித்தீவு படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறேன். குறைவான நாள்களில் இந்தப் படத்தை இயக்கிருக்கிறேன். இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். சமூகத்துக்கு தேவையான ஒரு அம்சத்த்தை கமர்ஷியல் வரைமுறைக்கு உள்பட்டு செய்து முடித்திருக்கிறேன்'' என்றார்.