கருவூலம் என்னிடம் வரப்போகிறது...

கி.மு. 336-331-ஆம் ஆண்டு காலத்தில் பாரசீகத்தை ஆண்டு வந்த அரசின் பெயர் டேனியல். இந்த நாட்டின் மீது கிரேக்க சக்கரவர்த்தி அலெக்சாந்தர் படையெடுக்க முடிவு செய்ததை அறிந்தார் டேனியல்.
கருவூலம் என்னிடம் வரப்போகிறது...

கி.மு. 336-331-ஆம் ஆண்டு காலத்தில் பாரசீகத்தை ஆண்டு வந்த அரசின் பெயர் டேனியல். இந்த நாட்டின் மீது கிரேக்க சக்கரவர்த்தி அலெக்சாந்தர் படையெடுக்க முடிவு செய்ததை அறிந்தார் டேனியல். இதையடுத்து, அலெக்சாந்தருக்கு டேனியல் அனுப்பிய கடிதத்தில்,  இத்துடன் ஒரு பெட்டியில் தங்கம், எள் மூட்டை,  பந்து, சாட்டை ஆகியவற்றை அனுப்பியுள்ளேன். தங்கத்தின் நிலை எனது படைபலத்தைக் குறிக்கும்.  சாட்டையானது எனது அதிகாரப் பலத்தை பறைசாற்றும். நீ விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாய். அதற்காகப் பந்து' என கூறப்பட்டிருந்தது. அலெக்சாந்தர் இதற்குப் பதில் தெரிவித்து அனுப்பிய கடிதம்:

""நீ அனுப்பியவைகள் கிடைத்தன. தங்கம்- விரைவில் உன் கருவூலம் என்னிடம் வரப் போவதை அறிவித்துவிட்டன.  எள் மூட்டையோ உன் படைபலம் என்ன என்பதையும், உண்மையில் எள்போல ஊதி விடலாம் என்பதையும் உணர்த்திவிட்டன.  உனது சாட்டை உன்னையே தண்டிக்க உதவப் போகிறது. பந்து போன்ற இந்தப் பூமி என் வசம் விரைவில் வரப் போகிறது. 

உனக்கு இன்று ஒரு பை நிறைய கடுகை அனுப்பியுள்ளேன். எவ்வளவு கசப்பானது என்பதை உணர்வாய்.  என் வெற்றி உனக்கு அவ்வளவு கசப்பைத் தரும் என்பதை நீயே அறிந்துக் கொள்'' என்று கூறப்பட்டிருந்தது. இறுதியில் இரு நாட்டுப் படைகளும் கி.மு. 331-இல் இன்னன் என்ற இடத்தில் மோதின. பாரசீகப் படை தோற்று, அரசர் டேனியல் தப்பி ஓடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com